முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரம் கோவிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்கக்கூடாது: தீட்சிதர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Chennai-high-court2

Source: provided

 சென்னை : சிதம்பரம் நடராஜர் கோவிலில் 6 கால பூஜை தவிர மற்ற நேரங்களில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்கக் கூடாது என பொது தீட்சிதர்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கு சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது பொது தீட்சிதர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கனகசபை மீது நின்று தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை. மேலும், ஆறு கால பூஜை நேரத்தில் மட்டும் பக்தர்கள் கனகசபையில் அனுமதிக்கப்படுவதில்லை என்று தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் விழாக்காலங்களில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்யத் தீட்சிதர்கள் அனுமதிக்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. 

இந்த இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 6 கால பூஜை தவிர மற்ற நேரங்களில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்கக்கூடாது என பொது தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து