முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரங்கு அம்மை நோய் புதிய கொரோனா தொற்று அல்ல: உலக சுகாதார அமைப்பு விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      உலகம்
World health

ஜெனீவா, ஆப்ரிக்க நாடுகளில் பரவிவரும் குரங்கு அம்மை நோய் புதிய கோவிட் தொற்று அல்ல என்றும், இதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்குத் தெரியும் என்றும் உலக சுகாதார அமைப்பு அதிகாரி ஹன்ஸ் க்ளூஜ் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் நேற்று பேசிய உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய இயக்குநர் ஹன்ஸ் க்ளூஜ், “நாம் ஒன்றாக இணைந்து இந்த குரங்கு அம்மை நோயை சமாளிக்க முடியும். நாம் சமாளிக்க வேண்டும்.

நாம் குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பின்பற்றி உலகெங்கும் இந்த நோய்ப் பரவலை முற்றாக அழிக்கப் போகிறோமா? அல்லது இதனைப் புறக்கணித்து மீண்டும் அச்சத்தின் சுழலில் சிக்கப் போகிறோமா? நாம் எவ்வாறு இந்த நோயை எதிர்கொள்கிறோம் என்பதில் தான் நாம் இதிலிருந்து மீள்வதற்கான வழி இருக்கிறது” என்று பேசினார். மேலும், “இந்த குரங்கு அம்மை நோய் புதிய கோவிட் தொற்று அல்ல” என்றும் அவர் கூறினார்.

குரங்கு அம்மை நோயின் புதிய கிளேட் 1 வகை நோய் மீது அதிக கவனம் செலுத்துவதால், குறைந்த தீவிரம் கொண்ட கிளேட் 2 வகை மீதும் கவனம் செலுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது என்றும் இதன் மூலம் ஐரோப்பாவில் சிறந்த பொதுசுகாதார ஆலோசனைகள் மற்றும் கண்காணிப்பையும் வழங்க முடிவதாகவும் ஹன்ஸ் க்ளூஜ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து