முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்பு : மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று துவக்கம்

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      தமிழகம்
MBBS-PDS 2023 06 27

Source: provided

சென்னை : இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம்  சென்னையில் வெளியிடப்பட்ட நிலையில் முதல் கட்ட  கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.  கலந்தாய்வுக்கான முழு விவரங்களை  மாணவர் சேர்க்கை செயலாளர் அருணா அறிவித்துள்ளார். 

அதன்படி பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று  காலை 10 மணி முதல் tnselection.org இணைய முகவரி வழியாக பொதுப்பிரிவில் இடம்பெற்றுள்ள 28,819 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.  இன்று காலை 10 மணி முதல் 27-ம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் தாங்கள் விரும்பக் கூடிய கல்லூரிகளின் பெயர்களை பதிவிடலாம். அரசு ஒதுக்கீட்டு இடைங்களை பொறுத்தவரையில் நீட் மதிப்பென் 720 முதல் 127 மதிப்பெண்கள் வரை இந்த இந்த கலந்தாய்வில் இடம்பெற அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் நிர்வாக ஒதுக்கீடு இடங்களை பொறுத்தவரையில் 715 முதல் 127 மதிப்பெண்கள் வரையிலான 13,417 மாணவர்கள் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல்சுற்று கலந்தாய்வு வரும் 28-ம் தேதி மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் 29-ம் தேதி தற்காலிக முடிவுகள் வெளியிடப்படும் எனவும் 30-ம் தேதி இறுதி முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதற்கட்ட கலந்தாய்வில் ஒதுக்கீடு பெறும் மாணவர்கள் செப்டம்பர் 5-ம் தேதி வரை மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை   நேரடி முறையில் சென்னை ஓமந்தூரார் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து