முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக். 4-ல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      ஆன்மிகம்
Tirupati 2024-02-16

Source: provided

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் அக்டோபர் 4-ம் தேதி தொடங்கி 12-ம்தேதி வரை நடைபெறுகிறது. 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு பிரம்மோற்சவம் வரும் அக்டோபர் 4-ம்தேதி தொடங்குகிறது. 12-ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி அக்டோபர் 3-ம்தேதி மாலை அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது.

தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் சுவாமி நான்கு மாடவீதிகளில் வாகன சேவைகள் நடைபெற உள்ளது. 4-ம்தேதி மாலை 5.45 முதல் 6 மணிக்குள் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. அன்றிரவு 9 மணிக்கு பெரியசேஷ வாகன உற்சவம் நடைபெறும். 5-ம்தேதி காலை 8 மணிக்கு சின்ன சேஷ வாகன உற்சவம், இரவு 7 மணிக்கு அன்ன வாகன உற்சவம், 6-ம்தேதி காலை 8 மணிக்கு சிம்ம வாகன உற்சவம், இரவு 7 மணிக்கு முத்துபந்தல் வாகன உற்சவம், 7-ம்தேதி கற்பக விருட்ச வாகன உற்சவம், இரவு 7 மணிக்கு சர்வ பூபால வாகன உற்சவம் நடைபெறும்.

8-ம்தேதி காலை 8 மணிக்கு மோகினி அவதாரத்தில் சுவாமி மாடவீதிகளில் பவனி நடைபெறும். அன்று மாலை முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11.30 மணி வரை நடைபெறும். 9-ம்தேதி கஜ வாகன உற்சவம், 10-ம்தேதி சூரியபிரபை உற்சவம், இரவு சந்திரபிரபை வாகன உற்சவம், 11-ம்தேதி குதிரை வாகன உற்சவம், 12-ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. அன்றிரவு 8.30 முதல் 10.30 மணி வரை கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து