முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேங்கைவயல் விவகாரம்: மீண்டும் அவகாசம் கோரி சி.பி.சி.ஐ.டி. மனுத்தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Ve-kaivayal 2023-05-06

Source: provided

புதுக்கோட்டை : வேங்கைவயல் விவாகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என்று மீண்டும் சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலந்திருந்தது 2022, டிசம்பர் 26-ஆம் தேதி தெரியவந்தது. தற்போது இவ்வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி வழக்குரைஞர்கள் மார்க்ஸ் ரவீந்திரன், ராஜ்கமல் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளைத் தனித்தனியாக தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணையின்போது, சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் முடிந்தும், போலீஸாரால் ஒருவரைக்கூட கைது செய்ய முடியாதது ஏன்? மனிதாபிமானமற்ற முறையில் குடிநீர்த் தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக அறிக்கைகளை மட்டும் பெற்றுக் கொண்டிருக்க முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு, மேலும் ஒரு மாத கால அவகாசம் கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து