முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க பொருளாதாரம் முதல் கருக்கலைப்பு சட்டம் வரை டிரம்ப் - கமலா ஹாரிஸ் அனல் பறந்த விவாதம்

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2024      உலகம்
Trump-Kamala 2024-09-11

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி டி.வி. நேரலையில் டிரம்ப் - கமலா ஹாரிஸ் இடையே அனல் பறந்த விவாதம் நடைபெற்றது. இதில் அமெரிக்கப் பொருளாதார நிலவரம் முதல் கருக்கலைப்புச் சட்டம் வரை  விவாதம் நடைபெற்றது.

வரும் நவம்பர் 5-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில்  டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர்.  இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் -  டிரம்ப் இடையிலான நேருக்கு நேர் விவாதத்தை அமெரிக்காவின் பிலடெல்பியாவில் ஏ.பி.சி ஊடகம் ஏற்று நடத்தியது.   

 விவாதத்தைத் தொடங்கிய ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், டிரம்ப் ஆட்சியின் கீழ் தான் அமெக்கா மிகப் பெரிய வேலைவாய்ப்பின்மை சிக்கலை எதிர்கொண்டது. அமெரிக்க பொருளாதாரத்தின் பெரும் மந்தநிலை காலத்துக்குப் பின்னர் மோசமான வேலைவாய்ப்பின்மை சிக்கல் டிரம்ப் ஆட்சியில் தான் நிகழ்ந்தது.  நான் அதிபரானால் அந்த நிலை மாற்றப்படும். அமெரிக்காவில், வேலைவாய்ப்புகளைத் தரும் பொருளாதாரத்தை கட்டமைக்க விரும்புகிறேன். அமெரிக்காவில் வீட்டு வசதியை கையடக்க விலைக்குக் கொண்டு வருவேன். குழந்தை வரிக்கடன் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். டிரம்ப் அதிபரானால் அவர் டிரம்ப் சேல்ஸ் டேக்ஸ் கொண்டு வருவார். 

அதாவது அன்றாடம் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் 20 சதவீதம் வரி விதிக்கப்படும்.  கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் டிரம்ப் ஏற்படுத்தி வைத்திருந்த பொருளாதார சீரழிவுகளை பைடன் சரிசெய்துள்ளார். டிரம்புக்கு உங்களுக்கான திட்டம் என்று எதுவும் இல்லை. அவர் எப்போதும் அவரை தற்காத்துக் கொள்வதிலேயே முனைப்பு காட்டுவார் என்றார். ஆனால் இதனை மறுத்த டிரம்ப், தனது ஆட்சிக் காலத்தில் தான் அமெரிக்கப் பொருளாதாரம் மிக செழிப்பாக இருந்தது என்றார்.

 கருக்கலைப்பு உரிமைகள் பற்றி பேசுகையில், டிரம்ப் அதிபரானால் தேசம் தழுவிய கருக்கலைப்பு தடை அமலுக்கு வரும். பாலியல் வன்கொடுமைகள், நெருங்கிய குடும்ப உறவுகளுக்கு இடையேயான தகாத பாலுறவு மூலம் உருவாகும் கருவினை கலைப்பது கூட டிரம்ப் ஆட்சி அமைந்தால் கடினமாகி விடும். அதனால் டிரம்ப்பை ஆதரிக்கக் கூடாது என்று கமலா ஹாரிஸ் கூறினார். அப்போது டிரம்ப், சில மாகாணங்களில் குழந்தைகள் பிறந்த பின்னர் கொல்லப்படுகின்றனர். ஜனநாயகக் கட்சி 9-வது மாதத்தில் கூட கருக்கலைப்பை அனுமதிக்க வேண்டும் என விரும்புகிறது என்றார். 

அப்போது குறுக்கிட்ட நெறியாளர் அமெரிக்காவில் குழந்தைகள் பிறந்த பின்னர் கொலை செய்யப்படுவதை எந்த மாகாண சட்டமும் அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 3 பேர் டிரம்பால் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்று கமலா ஹாரிஸ் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து சட்டவிரோத குடியேற்றம் அமெரிக்காவுக்கு சவாலாக இருப்பதாக கூறிய டிரம்ப், அவ்வாறு குடியேறுபவர்கள் ஓஹியோ நகரவாசிகளின் செல்லப் பிராணிகளை வதைத்து உணவாக்கிக் கொள்வதாகக் கூறினார். அதற்கு நெறியாளர் குறுக்கிட்டு அப்படியான செய்திகளுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று தெரிவித்தார்.

ரஷ்யா - உக்ரைன் போர்: ரஷ்யா - உக்ரைன் போர் 31-வது மாதமாக நீடித்து வரும் நிலையில் அது குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ், எங்களுக்கும் ஜெலன்ஸ்கிக்கும் இடையே நல்லுறவு இருக்கிறது. நல்லவேளை இந்த போர் மூண்ட தருணத்தில் நீங்கள் (டிரம்ப்) அதிபராக இருக்கவில்லை. இல்லாவிட்டால் இந்நேரம் புடின், கீவ் நகரில் அமர்ந்து கொண்டு ஐரோப்பிய நாடுகளை எப்படித் தாக்குவது என்று திட்டம் தீட்டிக் கொண்டு இந்திருப்பார். புடின் ஒரு சர்வாதிகாரி. அவர் உங்களை மதிய உணவாக புசித்து விடுக்கூடும் என்று எச்சரித்தார். அதற்குப் பதிலளித்த டிரம்ப், கமலா ஹாரிஸ் தான் அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான துணை அதிபர். உக்ரைன் - ரஷ்ய போரை அவர் தடுக்கத் தவறி விட்டார் என்றார்.

 அதை தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதலில் 40 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இறந்து விட்டனர். நான் மட்டும் அதிபராக இருந்திருந்தால் இந்தப் போர் மூண்டிருக்காது. கமலா ஹாரிஸுக்கு இஸ்ரேல் மீது கடும் வெறுப்பு உண்டு. அவர் அமெரிக்க அதிபரானால் இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போகி விடும் என்று டிரம்ப் தெரிவித்தார்.  டிரம்பின் இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். அவர் பிரச்சினையை திசைதிருப்பி, பிரித்தாள முயற்சிக்கிறார். அவருக்கு எப்போதுமே சர்வாதிகாரிகள் மீது அபிமானம் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தன்னையே ஒரு சர்வாதிகாரியாகப் பார்க்கவே விரும்புகிறார் என்று கமலா ஹாரிஸ் பதிலடி கொடுத்தார். இவ்வாறாக ட்ரம்ப் - ஹாரிஸ் நேரடி விவாதம் களை கட்டியது. இந்த விவாதத்துக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து