முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் கட்டமாக 24 தொகுதிகளில் தேர்தல்: ஜம்மு காஷ்மீரில் பிரசாரம் ஓய்ந்தது

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2024      இந்தியா
Amit-Shah  2024-03-10

Source: provided

ஶ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள 24 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது. அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் 24 தொகுதிகளில் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இது. ஜம்மு காஷ்மீரில் 2014-ல்தான் கடைசியாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.முதல் கட்ட தேர்தல் காஷ்மீர் பிராந்தியத்தில் 16 தொகுதிகளிலும் ஜம்முவில் 8 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் பாஜக, காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி, மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் மாநில கட்சிகள் களம் காண்கின்றன. 

ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தலில் 23 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 219 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி பிஜ்பிகாரா தொகுதியில் களம் காண்கிறார். ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 3 இடங்களில் பிரசாரம் செய்தார். ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் பிரசாரம் செய்ய உள்ளார். ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்கும் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை முறியடிக்க பாதுகாப்புப் படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து