முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சல்மான் கானை தொடர்ந்து நடிகர் ஷாருக்கானுக்கும் கொலை மிரட்டல்: மும்பை போலீசார் வழக்குப்பதிவு

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      சினிமா
Shah-Rukh-Khan-2024-11-07

மும்பை, பாலிவுட் நடிகர் சல்மான் கானை தொடர்ந்து ஷாருக்கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மும்பை பந்த்ரா போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாக மிரட்டல் அழைப்பு ஒன்று பந்த்ரா காவல் நிலையத்தின் தொலைப்பேசி எண்ணுக்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. ஷாருக்கான் ரூ.50 லட்சம் பணம் கொடுக்கவேண்டும். தவறினால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மும்பை போலீசார், சைபர் குற்றப்பிரிவு போலீஸாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பி.என்.எஸ் பிரிவுகள் 308(4) மற்றும் 351 (3)(4) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மிரட்டல் அழைப்புகளைக் கொடுத்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து நடிகர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

மிரட்டல் அழைப்பு சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இருந்து வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பைசான் கான் என்ற நபரின் அழைப்பேசி மூலம் மிரட்டல் அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து அந்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து ராய்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

சமீபத்திய மாதங்களில் இதே போன்ற தொடர் மிரட்டல்கள் சக பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கும் விடுக்கப்பட்டது. அக்டோபர் 30-ம் தேதி இதே போன்ற ஒரு கொலை மிரட்டல் நடிகர் சல்மான் கானுக்கு விடுக்கப்பட்டது. அப்போது அவரிடம் ரூ.2 கோடி பிணைத்தொகை கேட்கப்பட்டது.

இதனிடையே நடிகர் சல்மான் கான் மற்றும் பாபா சித்திக் மகனும் என்.சி.பி. எம்.எல்.ஏ.வுமான ஜீஷன் சித்திக் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக நொய்டாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். குற்றம்சாட்டப்பட்டவர் முகம்மது தைய்யப் அல்லது குர்பான் கான் என்பது தெரியவந்துள்ளது. அவர் நொய்டாவின் செக்டார் 39-ல் கைது செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து