முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஸ்லிம்களின் உரிமைகள் மறுப்பு: ஈரான் தலைவருக்கு இந்தியவெளியுறவு துறை கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2024      இந்தியா
Iran 2024-03-17

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக விமர்சித்த ஈரான் தலைவரின் பதிவுக்கு வெளியுறவு துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

ஈரான் நாட்டின் அதிகாரமிக்க தலைவரான அயதுல்லா அலி கமேனி வெளியிட்டிருந்த பதிவில், காசா, மியான்மரில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவது போன்று இந்தியாவிலும் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இவ்வாறு துன்பப்படும் முஸ்லிம் மக்களை பாதுகாக்க, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் என்று  வலியுறுத்தி இருந்தார்.

இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், 

இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் குறித்து ஈரானின் தலைவர் தெரிவித்த கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். அடிப்படை ஆதாரமற்ற தகவலை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரது நாட்டில் வசிக்கும் சிறுபான்மையினர் நிலைமை குறித்து அவர் கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மற்றவர்கள் மீது கருத்து சொல்லும் முன், தங்களது நிலையை உணர வேண்டும் என்று கூறினார். 

ஈரான் நாட்டை பொருத்தமட்டில், அந்நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் தொடர்பான விமர்மனங்களை சர்வதேச அளவில் எதிர்கொண்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து