முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் : மத்திய அமைச்சர் அமித்ஷா தகவல்

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2024      இந்தியா
Amit-Shah 2023-11-26

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு 3-வது முறை ஆட்சியமைத்து நேற்று 100-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் நேற்று  செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, பா.ஜ.க. ஆட்சியில் இந்த 100 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், இனி மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்தும் அமித்ஷா பேசினார். அதை தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதாவது,

இந்த அரசின் ஆட்சி காலத்தின் போதே ஒரேநாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும். ஒரே நாடு ஒரே தேர்தலை சந்திக்க நாடு முன்வரவேண்டும்.  நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம் என்றார்.

இந்தியாவில் 1881-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா காரணமாக 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கவிருந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறவில்லை.

கொரோனா பரவல் முடிவுக்கு வந்த நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது என்ற கேள்வி எழுந்து வருகிறது. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டுமென பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என அமித்ஷா கூறியுள்ளது  முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

தற்போது 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே அரசின் கொள்கைகள், மானியங்கள் வழங்கப்பட்டு வருவது  குறிப்பிடத்தக்கது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து