முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி பிறந்த நாள்: ஜனாதிபதி முர்மு, அமித்ஷா, தலைவர்கள் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2024      இந்தியா
Modi-2 2024-05-07

Source: provided

புதுடெல்லி : தனது 74-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட  தலைவர்கள் பலரும்  வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று பிறந்த நாள். நாடு முழுவதிலும் பா.ஜ.க. தொண்டர்கள் அவரது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

ஜனாதிபதி திரவுபதி முர்மு தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  நரேந்திர மோடிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் ஆளுமை மற்றும் பணியின் மீதான வலிமையால் அசாதாரணமான தலைமைத்துவத்தைக் கொண்டவர். 

நாட்டின் செழிப்பையும் மதிப்பையும் உயர்த்தியவர். தேச உணர்வில் நீங்கள் மேற்கொள்ளும் புதுமையான முயற்சிகள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வழி வகுக்கிறது. நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

மத்திய உள்துறை அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

அயராத உழைப்பு, பக்தி மற்றும் தொலைநோக்கு பார்வையால் மக்களின் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வந்து நாட்டுக்கு பெருமை சேர்த்ததோடு, உலகளவில் புதிய நற்பெயரையும் பெற்றுத் தந்த பிரபலம் பிரதமர்  மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா தமது வாழ்த்துச் செய்தியில், வலிமையான, வளமான இந்தியாவுக்கான உங்களின் பார்வை ஒவ்வொரு இதயத்திலும் எதிரொலிக்கிறது. ஆற்றல்மிக்க தலைமையும், அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நாட்டை மாற்றி அமைக்கவும், தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கவும் தொடரட்டும் என்று கூறி உள்ளார்.

மகராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உங்களின் தலைமையின் கீழ் நாடு பொருளாதார வல்லரசாக மாறுகிறது. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற உங்களின் எண்ணம் நிறைவேற சக்தி கிடைக்க வேண்டும். தங்களின் முயற்சிகளுக்கு மகராஷ்டிரா துணை நிற்கும். நாட்டின் கேப்டனான உங்கள் தலைமையில் 21-ம் நூற்றாண்டு என்பது இந்தியாவின் நூற்றாண்டு என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழட்டும் என்றும், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிறந்தநாள் வாழ்த்துக்கள் நரேந்திர மோடி ஜி. நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்  என்றும் தெரிவித்துள்ளார்.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் நேற்று காலை காந்திநகரில் உள்ள ராஜ்பவனில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து