முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் விவகாரம்: கேரளாவுக்கு விரையும் தேசிய மகளிர் ஆணையம்

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2024      சினிமா
National-Commission 2023 06

Source: provided

திருவனந்தபுரம் : மலையாள நடிகைகள் பாலியல் விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் கேரளாவுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிறகு மலையாள நடிகர்கள், இயக்குனர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது.  இதில், பல நடிகர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மலையாள திரையுலகை அதிர வைத்துள்ளது.

ஹேமா கமிட்டி 3,896 பக்கங்களில் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதில் வெறும் 296 பக்கங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. முழு அறிக்கையும் சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் 20 பேரிடம் இதுவரை சாட்சிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் வழக்கு பதிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையை துவங்கி உள்ளது. சாட்சிகளிடம் முதல் கட்ட விசாரணை வரும் 30-ம் தேதி முடிவடையும். இந்த விசாரணை குறித்து தகவல், அக்டோபர் 3-ம் தேதி ஐகோர்ட்டில் ஹேமா கமிட்டி தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வரும் போது அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கேரளாவுக்கு நேரில் சென்று நடிகர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகைகளிடம் நேரடியாக விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணையம் முடிவு செய்துள்ளது. 

பா.ஜ.க. தலைவர் சந்தீப் வச்சஸ்பதி மற்றும் பி.ஆர்.,சிவசங்கர் அளித்த புகாரின் பேரில், கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி தேசிய மகளிர் ஆணையம் கேரள தலைமை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது.  விரைவில் தேசிய மகளிர் ஆணையம் கேரளாவுக்கு சென்று விசாரணை நடத்தும் என்பதால், கேரள திரையுலகின் பாலியல் விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து