எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பா.ஜ.க.வுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை. இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இது எதிர்காலத்திலும் தொடரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது: திமுகவை போல ஒரு மறைமுக கூட்டணியை எப்போதும் அதிமுக பின்பற்றுவது கிடையாது. திமுகவை போல உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று என்பது அதிமுகவில் கிடையாது. எடுத்த முடிவு எடுத்த முடிவு தான். பா.ஜ.க.வுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை. கட்சியின் இந்த நிலைப்பாட்டிலும் எந்த மாற்றமும் இல்லை. இதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக விளக்கியுள்ளார். ஆனால் ஊடகங்கள் அதை திசை திருப்பி இருக்கின்றன, அது உண்மை இல்லை.
பிரதமரை எந்த அமைச்சராவது நேரில் சென்று பார்த்திருக்கிறார்களா?. பிரதமர் முதல்வர்களை சந்திப்பதே மிகவும் அரிது, அதிலும் குறிப்பாக சில முதல்வர்களை மட்டும்தான் பிரதமர் சந்திப்பார். குறிப்பாக அமைச்சர்களை பார்த்த வரலாறே கிடையாது. ஆனால் உதயநிதி, பிரதமர் மோடியை சென்று சந்திக்கிறார் என்றால் எந்த அளவுக்கு மறைமுக கூட்டணி இருக்கிறது.
திமுக என்கிற மக்கள் விரோத சக்தியை விரட்டி அடிக்க வேண்டும். அந்த வகையில் பா.ஜ.க.வைத் தவிர்த்து மற்ற கட்சிகள் ஒத்த கருத்தோடு வரும்போது, இது குறித்து கட்சியும் பொதுச் செயலாளரும் முடிவு செய்வார்கள். இதைத்தான் எடப்பாடியும் தெரிவித்தார். ஆனால் அது திரித்து கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க.வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இது எதிர்காலத்திலும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
இபிஎஸ் பேட்டியால் எழுந்த சலசலப்பு... முன்னதாக, ‘எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா?’ என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்த ஒத்த கருத்துள்ள அனைவரும் அதிமுக கூட்டணியில் இணையலாம். தேர்தல் நேரத்தில் அரசியல் சூழலுக்கு ஏற்றபடி எந்த கட்சி தலைமையிலான கூட்டணியில் யார் வருவார் என்பது தெரியவரும்.
தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. மற்ற திட்டங்களுக்கு நிதி இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். முட்டுகாட்டில் கலைஞர் பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்க மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?” என தெரிவித்திருந்தார்.
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்காமல் தனித்தனியே போட்டியிட்டன. விரைவில் பா.ஜ.க.வில் தேசிய அளவில் நிர்வாக ரீதியாக மாற்றங்கள் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமியின் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
தமிழகம் நோக்கி நகரும் புயல் சின்னம்: அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
12 Nov 2024சென்னை, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று மதியம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியிருந்த நிலையில் அது தமிழகத்தை நோக்கி நகர
-
தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைத்தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்பு
12 Nov 2024சென்னை, தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
-
கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
12 Nov 2024சென்னை, கனமழை எச்சரிக்கையையடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அர
-
தங்கம் விலை ரூ. 1,080 குறைந்தது
12 Nov 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக நேற்று (நவ. 12) சவரனுக்கு ரூ. 1,080 குறைந்து விற்பனையானது.
-
கங்குவா சிறப்புக்காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
12 Nov 2024சென்னை : கங்குவா திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணியின் போட்டிகளை துபாயில் நடத்த ஐ.சி.சி. திட்டம்
12 Nov 2024துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என பி.சி.சி.ஐ., சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்திருந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி கி
-
தெலுங்கர்கள் குறித்து சர்ச்சை கருத்து: நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் வழங்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
12 Nov 2024மதுரை : ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான நட்புறவை கெடுக்கும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு, தெலுங்கு பேசும் பெண்களை நடிகை கஸ்தூரி அவதூறாக
-
பொதுக்கூட்டத்தில் பங்கேற்காததால் மகராஷ்டிரா மக்களிடம் மன்னிப்பு கோரிய ராகுல்
12 Nov 2024மும்பை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இயலாததால் மகாராஷ்டிர மக்களிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டு செவ்வாய்க்கிழமை காணொலி வெளியிட்டுள்ள
-
ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: 43 தொகுதிகளில் இன்று முதல்கட்டமாக தேர்தல் : கேரளா, வயநாடு மக்களவைக்கும் இன்று இடைத்தேர்தல்
12 Nov 2024ராஞ்சி : ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கான முதல்கட்டத் தேர்தல் இன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
உதயநிதியுடன் விவாதிக்க நான் தயார்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
12 Nov 2024சென்னை, சவால் விடுவதை விட மக்களை காப்பதுதான் முக்கியம் என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உதயநிதியுடன் விவாதிக்க நான் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ள
-
மேட்டூர் அணை நிலவரம்
12 Nov 2024மேட்டூர் : மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.நேற்று காலை மேட்டூர் அணையின் நீர்ம
-
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர்: ம.பி.க்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்குகிறார் முகமது ஷமி
12 Nov 2024கொல்கத்தா : இன்று தொடங்க உள்ள மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் பெங்கால் அணியில் முகமது ஷமி களம் காண உள்ளார்.
-
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 235 பேர் கோடீஸ்வர வேட்பாளகள்
12 Nov 2024ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேட்பாளர் ஒருவரின் சொத்து மதிப்பு ரூ.
-
3-வது டி20 போட்டி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை
12 Nov 2024செஞ்சூரியன் : டி20 தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில் இன்று 3-வது டி20 போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
-
வன்முறை தொடர்ந்து அதிகரிப்பு: மணிப்பூரில் ஊரடங்கு அமல்
12 Nov 2024இம்பால், மணிப்பூர் மாநிலத்தில் ஓரிரு இடங்களில் கடந்த சில நாள்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளத்தை அடுத்து அங்கு காலவரையற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
வரும் நவ. 14, 15-ம் தேதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும்: அமைச்சர்
12 Nov 2024சென்னை, சுபமுகூர்த்த தினங்களான நவம்பர் 14, 15 தேதிகளில் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
11 புதுச்சேரி மீனவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை இலங்கை நீதிமன்றம் உத்தரவு
12 Nov 2024புதுக்கோட்டை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 11 புதுக்கோட்டை மீனவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-11-2024.
13 Nov 2024 -
டாஸ்மாக் தரப்பை கேட்காமல் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு: சுற்றறிக்கையை எதிர்த்த வழக்கில் உத்தரவு
12 Nov 2024சென்னை, மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் டாஸ்மாக் கடை விற்பனையாளர் மட்டுமல்லாமல் அனைத்து பணியாளர்களையும் பணியிடை நீக்கம் செய்வது தொடர்பான டாஸ்மாக்கின் சுற்றறி
-
விளக்கம் கேட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது: யூடியூபர் இர்ஃபான் விவகாரத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
12 Nov 2024சென்னை, யூடியுபர் இர்பான் விவகாரத்தில் அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர் செய்தது கொலை குற்றமில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.
-
ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருது: பாக்., வீரர் நோமன் அலி தேர்வு
12 Nov 2024துபாய் : ஐ.சி.சி-யின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற பாகிஸ்தான் வீரர் நோமன் அலியும், சிறந்த வீராங்கனை விருதை நியூசிலாந்தின் மெலி கெர் வென்றுள்ளார்.
-
இலங்கை முன்னணி வீரர் விலகல்
12 Nov 2024நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
-
சபரிமலையில் பக்தர்களின் வாகனங்களை பம்பையில் நிறுத்த ஐகோர்ட் அனுமதி
13 Nov 2024திருவனந்தபுரம் : சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள், தங்களின் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களை பம்பையில் நிறுத்த கோரள கோர்ட்டு அனுமதி வழங்கியிருக்கிறது.
-
உத்தரபிரதேசத்தில் சோகம்: மண் சரிவில் சிக்கி 4 பெண்கள் பலி
12 Nov 2024கஸ்கஞ்ச் (உ.பி.), உத்தரபிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 4 பெண்கள் பலியாகினர்.
-
காற்றின் தரம் மோசம்: அடர்ந்த மூடுபனி நிலவியதால் டெல்லியில் விமான சேவைகள் பாதிப்பு
13 Nov 2024புதுடெல்லி : டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை அடர்ந்த மூடுபனி சூழ்ந்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.