முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: விவசாயிகளுக்கு சலுகைகளை அறிவிக்க காங்கிரஸ் திட்டம்

வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2024      இந்தியா
Malligarjuna 2024-11-01

திருப்பதி, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பெண்கள், விவசாயிகளுக்கு சலுகை அறிவிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இன்டியா கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தொகுதிகள் ஒதுக்கீடு சம்பந்தமாக இழுபறி நீடித்து வரும் நிலையில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் தலைமையில் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடந்த கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

கர்நாடகா, தெலுங்கானாவில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை. ரூ.500-க்கு சமையல் கியாஸ் வழங்கப்படும். அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம். விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் வரை கடன் தள்ளுபடி மற்றும் ரூ. 25 லட்சம் மருத்துவ காப்பீடு, காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான திட்டம். அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட 6 முக்கிய வாக்குறுதிகளை அளித்தனர்.

இந்த வாக்குறுதிகள் 2 மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. இதே பார்முலாவை மகாராஷ்டிரா தேர்தலிலும் கையில் எடுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. வருகிற 6-ந் தேதி புனேவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டு பேரணி நடைபெற உள்ளது. இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்கு பிறகு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து