முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: நகரம் முழுவதும் புகை மண்டலம்

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024      இந்தியா
Delhi 2024-10-19

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் நகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

டெல்லியில் தீபாவளி பண்டிகையை தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் நேற்று மோசமான நிலைக்கு காற்று மாசு சென்றது. காலை 8 மணி நிலவரப்படி காற்றின் தரம் 317 ஆக இருந்தது. 

ஆனால் காலை 6 மணி நிலவரபடி டெல்லியில் ஒட்டு மொத்த காற்றின் தரக்குறியீடு 434 ஆக இருந்தது. இது உலக சுகாதார மையம் பரிந்துரைத்த ஆபத்து வரம்பை விட 59 மடங்கு அதிகமாக உள்ளது. காற்று மாசு அதிகரிப்பால் நகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

காற்றின் அதிக மாசால் நுரையீரல் மற்றும் மூளை பாதிப்பு உண்டாக்கும் அபாயம் ஏற்படும். கடுமையான அளவில் உடல் நலத்தை பாதிக்கும். 200 மற்றும் 300-க்கு இடையில் காற்றின் மாசு தரம் இருந்தால் மோசமானதாக கருதப்படுகிறது. 300-400க்கு இடையில் மிகவும் மோசமானதாகவும், 400-450-க்கு இடையில் கடுமையானது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நேற்று ஆனந்தவிஹார் பகுதியில் காற்று மாசு 627 ஆகவும், அலிபூர் பகுதியில் 388, பஞ்சாபிபாக் 319, நரேலா 372, ஆர்.கே.புரம் 268, பவானா 368, ஐ.டி.ஐ. ஷஹ்த்ராவில் 408 ஆகவும் இருந்தது.சுமார் 200 நகரும் புகை எதிர்ப்பு கருவிகள் மூலம் டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து