முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் நோக்கி நகரும் புயல் சின்னம்: அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2024      தமிழகம்
Rain 2023-07-13

சென்னை, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று மதியம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியிருந்த நிலையில் அது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, வடதமிழகத்தை, தெற்கு ஆந்திரம் ஒட்டிய கடற்பகுதியில் நீடிப்பதால் இன்று மற்றும் நாளை வட தமிழக மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்று கேட்டதற்கு, இது ஏற்கனவே, கடற்கரையை ஒட்டி நிலவி வருவதால், புயலாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. அதேவேளையில், இது மிகவும் பலவீனமான மெதுவாக நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி என்பதால் இதே நிலையில், கரையைக் கடந்து செல்லும், இதனால் தொடர்ந்து 2 அல்லது 3 நாள்களுக்கு மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

பொதுவாகப் பார்த்தால், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மிகவும் பலவீனமான, மெதுவாக நகர்கிறது. எனவே, இது வலுவடையாமல், பலவீனாமான காற்றழுத்த தாழ்வு நிலையாகவே கடந்துசென்றுவிடும். இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் பாலச்சந்திரன் விளக்கம் கொடுத்துள்ளார். இதனால், அடுத்த 4 நாள்களுக்கு தமிழகம், புதுவை காரைக்காலில் மிதமான மழை முதல் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கனமழையைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் டெல்டா மாவட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து