முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்பை விட தற்போது நலமாக உள்ளேன்: சுனிதா வில்லியம்ஸ்

புதன்கிழமை, 13 நவம்பர் 2024      உலகம்
Sunita-Williams 2024-05-02

Source: provided

வாஷிங்டன் : சர்வதேச விண்வெளி மையத்தில் நீண்ட நாட்களாக உள்ளதால் உடல் எடை குறைந்துள்ளதாக வெளியான தகவலை மறுத்துள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், முன்பு இருந்ததை விட தற்போது நலமாக உள்ளேன் என விளக்கமளித்து உள்ளார்.

ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர். 

ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். இதனால், இருவரும் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நீண்ட நாட்களாக விண்வெளி மையத்தில் இருக்கும் அவரின் உடல் எடை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாகவும், மன அழுத்தத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை நாசா மறுத்தது.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து மீடியா ஒன்றுக்கு சுனிதா வில்லியம்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது: 

உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை. மைக்ரோ கிராவிட்டி காரணமாக உடலில் ஏற்படும் வழக்கமான மாற்றங்கள் காரணமாக எடை குறைந்தது போன்று காட்சியளிக்கிறது.

சர்வதேச விண்வெளி மையத்திற்கு வந்த போது என்ன உடல் எடை இருந்ததோ அதே எடை தான் உள்ளது. எனது உடல் நிலை சீராக உள்ளது. இதனை பேணுவதற்காக தினமும் உடற்பயிற்சி செய்து வருகிறேன். 

பளூதூக்குதல் பயிற்சி என்னை மாற்றி உள்ளது. இதனால், எனது கால்கள் வலுவடைந்துள்ளன. முன்பு இருந்ததை விட தற்போது நலமாக உள்ளேன் என்று அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து