முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமலையில் வரும் 17-ல் கார்த்திகை வன போஜனம் : தேவஸ்தானம் அறிவிப்பு

புதன்கிழமை, 13 நவம்பர் 2024      ஆன்மிகம்
Tirupati 2023 03 30

Source: provided

திருமலை : திருமலையில் வரும் 17-ம் தேதி கார்த்திகை வனபோஜன உற்சவம் நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வனபோஜன உற்சவத்தை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு வரும் 17-ம் தேதி இந்த உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை சிறிய கஜ வாகனத்தில் மலையப்பர் பார்வேட்டை மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்படுவார். 

இது போல் ஒரு பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவியும் ஊர்வலமாக வருவர். அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சன நிகழ்ச்சிகள் காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும்.

பிறகு அங்குள்ள பக்தர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகளுக்கு வன போஜனம் வழங்கப்படும். இந்த உற்சவத்தை முன்னிட்டு வரும் 17-ம் தேதி மாலை திருமலையில் நடைபெறும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும் வரும்  18-ம் தேதி கார்த்திகை தீப உற்சவம் கடைபிடிக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் திருப்பதி நகரில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலக வளாகத்தில் கார்த்திகை தீப உற்சவம் நடைபெற உள்ளது. 

இதில் தேவஸ்தான அதிகாரிகள், பெண் ஊழியர்கள் பங்கேற்று நூற்றுக்கணக்கான தீபங்கள் ஏற்றி சிறப்பு பூஜையில் ஈடுபடுவர். அதே நாளில் திருமலையில் கொடிக்கம்பம் அருகே உள்ள பலி பீடத்தில் பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து