முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11 புதுச்சேரி மீனவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை இலங்கை நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2024      தமிழகம்
Fishermen 2024-03-29

புதுக்கோட்டை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 11 புதுக்கோட்டை மீனவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் முதல்முறையாக கைது செய்யப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த அக். 9 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சென்ற 11 பேரையும், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 பேரையும் என மொத்தம் 15 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். இவர்களுடன் 3 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் மீதான விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து இலங்கை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

இதில், ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ரவீந்தர் (42), உலகநாதன் (38), அருள்நாதன் (29), வைத்தியநாதன் (30), குமரேசன் (37), மதன் (27), மகேந்திரன் (20), முனிவேல் (66), விஜய் (31), கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற சிவகுமார் (28), கருப்பசாமி (26) ஆகிய 11 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களுடன் சென்றிருந்த விக்னேஷ் (18), மகேஷ் (55), சூரியா (23), சூரியபிரகாஷ் (25) ஆகிய 4 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஏற்கெனவே ஒரு முறை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள். விடுவிக்கப்பட்டவர்கள் முதல் முறையாகக் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து