முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் விரைவில் 16 பெட்டிகள் இணைக்க திட்டம்

புதன்கிழமை, 13 நவம்பர் 2024      தமிழகம்
Vande-Bharat-train 2023-08-

Source: provided

சென்னை : சென்னை எழும்பூர் - நெல்லை வந்தே பாரத் ரயிலை விரைவில் 16 பெட்டிகள் கொண்டு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் தற்போது பல்வேறு முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னை எழும்பூா்- நெல்லை வந்தே பாரத் ரயியிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. 

இந்த ரயில் நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு அதே நாள் மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறு மார்க்கமாக, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10.40 மணிக்கு நெல்லையை அடைகிறது. 

இந்த ரயிலில் 7 ஏசி சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர்கார் பெட்டியும் என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் , பயணிகள் கூட்டம் அதிகமாகி வருவதால் சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலை 16 பெட்டிகளைக் கொண்டு இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. 

இது குறித்து தெற்கு ரயில்வே போக்குவரத்து பிரிவு, ரயில்வே கோட்டங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 

சென்னை எழும்பூா்-நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரெயிலில் (எண் 20665/20666) அதிக அளவில் பயணிகள் பயணம் செய்வதால், 16 பெட்டிகளைக் கொண்டு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப நெல்லை பணிமனையில் பராமரிப்பு நடவடிக்கையை உறுதி செய்து கொள்ள வேண்டும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து