முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் மாணவர்களுக்கு அபார் அடையாள அட்டை வழங்கும் பணி தொடக்கம்

புதன்கிழமை, 13 நவம்பர் 2024      இந்தியா
Karnataka 2024-11-13

Source: provided

பெங்களூரு : கர்நாடகாவில் மாணவர்களுக்கு அபார் எனும் தனித்துவ அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. 

மத்திய பள்ளிக் கல்வி அமைச்சகத்தின் தேசிய கல்விக் கொள்கை- 2020 திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க, `ஒரே நாடு, ஒரே மாதிரியான மாணவர் அடையாள அட்டை பரிந்துரைக்கப்பட்டது. 

அதன்படி, அனைத்து மாணவர்களுக்கும் அபார் சிறப்பு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அபார் அடையாள அட்டைக்கு மாணவரின் பெயரை சேர்ப்பதற்கு முன் பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம். 

பெற்றோரின் ஆதார், தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை இணைப்பதன் மூலம் மாணவர் ஐ.டி. உருவாக்கப்படுகிறது.

மாணவர்களின் பெயர்களை பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், பெற்றோர் கூட்டத்தை அழைத்து சம்மதம் பெற தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து அரசு, உதவி பெறும் மற்றும் உதவிபெறாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடம் ஒப்புதல் பெறும் பணி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வந்தது. 

இதையடுத்து முதற்கட்டமாக மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, ஆதார் எண் மாதிரி 12 இலக்க அபார் தனித்துவ அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

ஏ.பி.ஏ.ஆர் என்பது தானியங்கி நிரந்தர கல்வி கணக்குப் பதிவு என்பதை குறிக்கிறது. இது மாணவரின் வாழ்நாள் அடையாள எண்ணாக இருக்கும்.ஏற்கனவே மாநில அரசின் எஸ்.டி.எஸ். அடையாள அட்டை மற்றும் மத்திய அரசின் பி.இ.எண். ஆகியவை மாநில பாடத்திட்டப் பள்ளிகளின் மாணவர்களுக்கு நடைமுறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து