முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.ஐ.எஸ்.எப். பெண்கள் படை பிரிவுக்கு மத்திய அரசு அனுமதி

புதன்கிழமை, 13 நவம்பர் 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : நாட்டிலேயே முதல்முறையாக முழுவதும் பெண்களால் ஆன சி.ஐ.எஸ்.எப். பட்டாலியனை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி  சி.ஐ.எஸ்.எப். படையில் 1025 பேர் கொண்ட பெண்கள் படை தனியாக உருவாக்கப்பட்டுள்ளது.

 நாட்டில் வி.ஐ.பி. பாதுகாப்பு, விமான நிலையங்கள், மெட்ரோ ரயில்நிலையங்கள், மத்திய அரசு அலுவலகங்களில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நிலையை கருத்தில் கொண்டு நாட்டிலேயே முதல்முறையாக முழுவதும் பெண்களால் ஆன சி.ஐ.எஸ்.எப். பட்டாலியனை உருவாக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இந்த படையில் மூத்த கமாண்டன்ட் நிலை அதிகாரி முதல் மொத்தம் 1025 பெண் வீராங்கனைகள் இடம் பெறுவார்கள். தற்போது 1.80 லட்சமாக இருக்கும் சி.ஐ.எஸ்.எப். படையில் ஏழு சதவீதத்துக்கும் அதிகமான பெண் பணியாளர்கள் உள்ளனர்.

இதில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (சி.ஐ.எஸ்.எப்) முதல் அனைத்து மகளிர் ரிசர்வ் பட்டாலியனாக இந்த படை அமைக்கப்பட உள்ளது. தற்போது உள்ள 12 பட்டாலியன்களிலும் ஆண், பெண் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால் பெண் படையில் முற்றிலும் பெண் வீராங்கனைகள் மட்டுமே இடம் பெற உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து