முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று பொங்கல் பண்டிகை: தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2025      தமிழகம்
Pongal-2024-12-31

Source: provided

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், மக்கள் புத்தாடை, கரும்பு மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடும் வகையில், வெளியூரில் பல்வேறு காரணங்களுக்காக தங்கியிருக்கும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். இவ்வாறு, தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.

இந்த நிலையில், பொங்கலை முன்னிட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் விபரம் பின்வருமாறு;

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

"உலகத் தமிழர்கள் எல்லோரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனதருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், மக்கள் அனைவரும் குன்றா நலமும், குறையா வளமும், மங்கா புகழும், மாசிலா செல்வமும் பெற்று நிறை வாழ்வு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை:

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய போகிப் பண்டிகை நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரின் வாழ்க்கையில், அல்லவை நீங்கி நல்லவை பெருகிடவும், நேர்மறை எண்ணங்கள் சிறந்திடவும், தீமைகள் அகன்று, அமைதியும், மகிழ்ச்சியும், வெற்றியும் கிடைத்திடவும் வேண்டிக் கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்:

உலகெங்கும் வாழும் தமிழர்களின் அறுவடைத் திருநாளான தைப்பொங்கல் விழாவையும் தமிழ் புத்தாண்டையும் கொண்டாடும் தமிழ்ச் சொந்தங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டை பீடித்திருக்கும் அனைத்து தீமைகளும் விலக வேண்டும். அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், நன்மை, அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம், சமூகநீதி ஆகியவை செழிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, தமிழர்களின் வாழ்க்கையில் தைத்திருநாளும், தமிழ்ப் புத்தாண்டும் எல்லா நன்மைகளையும் வழங்கட்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்:

இயற்கைக்கு தமிழர்கள் நன்றி செலுத்தும் திருநாளான பொங்கல் விழாவையும், தமிழ் புத்தாண்டு நாளையும் கொண்டாடும் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் பல வகைகளிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை இருள் சூழ்ந்திருக்கிறது. அந்த இருள் அகற்றப்பட வேண்டும்; தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும். அத்துடன், அன்பு, அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி, நல்லிணக்கம், ஒற்றுமை, வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து நலங்களையும், வளங்களையும் தைத்திங்களும், தமிழ்ப்புத்தாண்டும் வழங்க வேண்டும். தை கொடுக்காததை தரணி கொடுக்காது என்பதே உண்மை. அதற்காக உழைக்க இந்த தைத்திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டில் தமிழர்களாகிய நாம்  இயற்கையின் முன் உறுதியேற்றுக் கொள்வோம்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்:

சமய வேறுபாடுகளையும், சனாதனக் கருத்தியலால் கட்டமைக்கப்பட்ட படிநிலை சாதிய சமூக வேறுபாடுகளையும் பயன்படுத்தி, மதவெறி ஆதிக்க சக்திகள் அரசியல் அதிகாரத்தில் தொடரும் பேராபத்தை உணர்ந்து, அதனை அதிகாரத்திலிருந்தும், சமூக வாழ்வில் இருந்தும் வெளியேற்ற தைத் திருநாளில் உறுதி ஏற்போம். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" மற்றும் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற தமிழ் சமூகத்தின் கனவுகளை நனவாக்க, அறிவியல் கருத்துக்களையும், சமூகநீதி ஜனநாயக கொள்கைகளையும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உயர்த்தி பிடித்து, சோசலிச திசைவழியில் பயணிக்க வேண்டும் என்ற விழைவோடு உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

ஓ.பன்னீர்செல்வம்:

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகளைத் மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பார்கள். இதற்கேற்ப தமிழ்நாட்டு மக்களுக்கு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்து, இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல், இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள் என்று வாழ்த்தி, அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்:

அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எத்தனையோ பேரிடர்கள், துயரங்களுக்கு மத்தியில் உலகத்திற்கே உணவளிக்கும் உன்னத பணியை இடைவிடாது மேற்கொண்டிருக்கும் உழவர்களை போற்றி வணங்குவதோடு, அவர்களின் வாழ்வில் வளமும் நலமும் நிலைக்கட்டும் எனக்கூறி தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து