எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Modi PM 2024-12-20](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/14/Modi%20PM_2024-12-20_0.jpg?itok=1Tfj71M3)
Source: provided
வாஷிங்டன்:இந்திய - அமெரிக்க மக்களுக்கு இடையிலான மெகா உணர்வு நமது இலக்குகளுக்கு புதிய பரிமாணத்தையும், உயர்ந்த நோக்கத்தையும் அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்கள் மத்தியில் உரை ஆற்றினார். அவர் பேசுகையில், அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது அன்புக்குரிய நண்பர் அதிபர் ட்ரம்ப்புக்கு நன்றி. அதிபர் ட்ரம்ப் தமது தலைமையின் மூலம் இந்திய-அமெரிக்க உறவைப் போற்றி புத்துயிர் அளித்துள்ளார்.
அவரது முதல் பதவிக்காலத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றிய போது இருந்த உற்சாகம்; இன்றும் அதே அளவில் உள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்பும், கூட்டாண்மையும் ஒரு சிறந்த உலகத்தை வடிவமைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதிபர் ட்ரம்ப்பின் குறிக்கோளான "அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள்" அல்லது மகா("MAGA")வும், இந்தியாவை மீண்டும் சிறந்ததாக்குங்கள், அதாவது மிகா( "MIGA")வும் இணையும்போது செழிப்புக்கான "MEGA" கூட்டாண்மை உருவாகிறது. மேலும், இந்த மெகா உணர்வு நமது இலக்குகளுக்கு புதிய பரிமாணத்தையும், உயர்ந்த நோக்கத்தையும் அளிக்கிறது.
2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர்களாக இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தை வலுப்படுத்துவோம். இந்தியாவின் பாதுகாப்புத் தயாரிப்பில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்த பத்தாண்டுகளுக்கு பாதுகாப்புத்துறை ஒத்துழைப்புக்கான சட்டக வரைவு உருவாக்கப்படும். பாதுகாப்பு செயல்பாடு, தளவாடங்கள், பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவை அதன் முக்கிய பகுதிகளாக இருக்கும்.
செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்திகள், குவாண்ட்டம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் பிற தொழில்நுட்பங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும்.
விண்வெளித் துறையில் அமெரிக்காவுடன் எங்களுக்கு நெருக்கமான ஒத்துழைப்பு உள்ளது. இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோள், விரைவில் இந்திய ஏவுகணை வாகனத்தில் இருந்து விண்வெளிக்குச் செல்லும். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கூட்டாண்மையானது ஜனநாயகம் மற்றும் ஜனநாயக மதிப்புகள், அமைப்புகளை ஆதரிக்கிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்த நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். இதில் குவாட் என்ற நால்தரப்பு பாதுகாப்பு பேச்சு வார்த்தை சிறப்புப் பங்கை வகிக்கும். இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில், புதிய பகுதிகளில் கூட்டாண்மை நாடுகளுடன் ஒத்துழைப்பை அதிகரிப்போம்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் உறுதியாக இணைந்துள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். 2008-ம் ஆண்டு இந்தியாவில் படுகொலைகளை நிகழ்த்திய குற்றவாளியை இப்போது இந்தியாவிடம் ஒப்படைக்க அதிபர் முடிவு செய்ததற்கு நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இந்திய நீதிமன்றங்கள் இப்போது பொருத்தமான நடவடிக்கை எடுக்கும்.
அதிபர் ட்ரம்ப் அவர்களே, 1.4 பில்லியன் இந்தியர்களின் சார்பாக, உங்களை இந்தியாவுக்கு வருமாறு அழைக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
14 Feb 2025சென்னை : சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து விற்பனையானது.
-
மார்ச் 6-ம் தேதி செட் தகுதித்தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
14 Feb 2025சென்னை : கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான செட் தகுதித்தேர்வு மார்ச் 6 முதல் 9-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
-
துரோகிகள் குறித்த பேச்சுக்கு செங்கோட்டையன் விளக்கம்
14 Feb 2025ஈரோடு : துரோகம் செய்தார்கள் என பேசியது அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
சீன எல்லை விவகாரத்தில் ட்ரம்ப்பின் மத்தியஸ்த முயற்சி: நாசூக்காக தவிர்த்தது இந்தியா
14 Feb 2025வாஷிங்டன் : சீனா உடனான எல்லை பிரச்சினையில் இந்தியாவுக்கு உதவ தயார் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், அந்த உதவியை இந்தியா தவிர்த்துள்ளது.
-
அமெரிக்காவில் 2 புதிய இந்திய தூதரகங்கள் பிரதமர் மோடி அறிவிப்பு
14 Feb 2025வாஷிங்டன்:இந்திய - அமெரிக்க மக்களுக்கு இடையிலான மெகா உணர்வு நமது இலக்குகளுக்கு புதிய பரிமாணத்தையும், உயர்ந்த நோக்கத்தையும் அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவி
-
வங்கதேசம் குறித்த கவலையை ட்ரம்ப்புடன் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி
14 Feb 2025வாஷிங்டன்: வங்கதேச நிலைமை குறித்த தனது கவலையை பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பகிர்ந்து கொண்டார் என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது
-
இந்தியாவிற்கு எப்-35 ரக விமானங்களை வழங்குகிறது அமெரிக்கா: டிரம்ப் தகவல்
14 Feb 2025வாஷிங்டன் : அமெரிக்கா இந்தியாவிற்கு எப் 35 ரக ஜெட் விமானங்களை வழங்கும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூரில் விமான சாகச நிகழ்ச்சி நிறைவு
14 Feb 2025பெங்களூரு : பெங்களூரில் ஏரோ இந்தியா 2025 என்ற விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
-
சென்னையில் வேல் யாத்திரை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு
14 Feb 2025சென்னை : சென்னையில் வேல் யாத்திரை நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது.
-
பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு
14 Feb 2025இஸ்லாமாபாத் : நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
6 மாத காலம் அமைதியாக இருங்கள்: ஓ.பி.எஸ்.,சை கட்சியில் சேர்க்க ராஜன் செல்லப்பா நிபந்தனை
14 Feb 2025மதுரை: ஆறு மாத காலம் அ.தி.மு.க.-வுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் அமைதியாக இருந்தால் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து நடவடிக்கை எடுப்போம்
-
புல்வாமா தாக்குதல் தினம்: உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர், உள்துறை அமைச்சர் புகழாரம்
14 Feb 2025புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு இதே நாளில் (பிப்.14) ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப்.
-
ஸ்ரேயாஸ் நீக்கம் குறித்து விமர்சனம்: பயிற்சியாளர் கவுதம் காம்பிர் விளக்கம்
14 Feb 2025மும்பை : அணியில் இருக்கும் வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்ததால் முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் பெயர் ஆடும் அணியில் முதலில் இடம்பெறவில்லை என
-
இந்தியா -அமெரிக்கா இடையே வர்த்தகத்தை 2030-க்குள் 500 பி.டாலராக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் பிரதமர் மோடி- அதிபர் டிரம்ப் சந்திப்பில் முடிவு
14 Feb 2025வாஷிங்டன்: பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பில், வரும் 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை ரூ.
-
அயோத்தி தலைமை அர்ச்சகர் உடல் சரயு நதியில் ஜலசமாதி
14 Feb 2025லக்னோ : அயோத்தி தலைமை அர்ச்சகர் உடலை சரயு நதியில் ஜலசமாதி செய்யப்பட்டது.
-
நாங்கள் இல்லாமல் அமைதி ஒப்பந்தமா? - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேள்வி
14 Feb 2025பெர்லின் : புதினை டிரம்ப் சந்திப்பதற்கு முன்னர், டிரம்ப்பை சந்திக்க நான் விரும்புகிறேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
-
தமிழக மீனவர்கள் பிரச்சினை: ராமேசுவரத்தில் தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம்
14 Feb 2025ராமேசுவரம் : இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி தி.மு.க. சார்பாக நாளை (பிப்.16-ம் தேதி), ர
-
மேற்குவங்கத்தில் ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டத்திற்கு அனுமதி : உயர் நீதிமன்றம் உத்தரவு
14 Feb 2025கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் பர்த்வான் மாவட்டத்தில் வரும் 16-ம் தேதி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்துள்ளது. இக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.
-
அ.தி.மு.க. வாக்கு சதவீதம் குறைந்ததா? - முன்னாள் அமைச்சர் சிவபதி மறுப்பு
14 Feb 2025சென்னை : அ.தி.மு.க. பின்தங்கியதாக கூறப்படும் கருத்துக்கணிப்புகளுக்கு முன்னாள் அமைச்சர் சிவபதி மறுப்பு தெரிவித்துள்ளார்,
-
த.வெ.க. தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு : மத்திய அரசு உத்தரவு
14 Feb 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
-
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் இன்று விமானம் மூலம் தாயகம் திரும்புகின்றனர்
14 Feb 2025புதுடெல்லி : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் இன்று விமானம் மூலம் இந்தியாவுக்கு வருகின்றனர்.
-
இந்தியா - அமெரிக்கா உறவு நன்றாக உள்ளது : அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து
14 Feb 2025வாஷிங்டன் : இந்தியா - அமெரிக்கா உறவு நன்றாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை: அரசு மீது ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
14 Feb 2025சென்னை : மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காத தி.மு.க. அரசு என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
ரஞ்சி அணியில் ஜெய்ஸ்வால்
14 Feb 202590-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
-
உக்ரைன் அணு உலை மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்
14 Feb 2025கீவ் : ரஷியா டிரோன் தாக்குதலில் உக்ரைன் அணு உலையின் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது உடனே மீட்புக்குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.