முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சி அணியில் ஜெய்ஸ்வால்

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2025      விளையாட்டு
Jaiswal 2024-02-02

Source: provided

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரின் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்களின் முடிவில் குஜராத் - கேரளா, மும்பை - விதர்பா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கின்றன. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் 160 ரன்கள் விளாசிய ஜெய்ஸ்வால், மொத்தமாக 391 ரன்கள் குவித்தார். சாம்பியன்ஸ் டிராபிக்கான முதல்கட்ட அணித் தேர்வில் இடம்பிடித்திருந்த ஜெய்ஸ்வால், கடைசி நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டதை அடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், இங்கிலாந்துக்கு எதிரான ஒரேயொரு ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி அவரால் சரியாக சோபிக்க முடியவில்லை. 

இந்நிலையில் ரஞ்சி டிராபிக்கான மும்பை அணியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை அணி அரையிறுதியில் விளையாடவிருக்கும் வேளையில் ஜெய்ஸ்வாலின் வருகை மும்பை அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. அரையிறுதி ஆட்டங்கள் வருகிற 17 ஆம் தேதி தொடங்கும் நிலையில், குஜராத் - கேரளம் இடையிலான போட்டி அகமதாபாத்திலும், மும்பை - விதர்பா இடையிலான அரையிறுதி போட்டி நாக்பூரிலும் நடக்கவிருக்கிறது.

___________________________________________________________________________________________

பாபர் அசாம் புதிய சாதனை

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக பாகிஸ்தான் - நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. நியூசிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றும், பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் வெற்றி, ஒன்றில் தோல்வியுடன் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில், இந்த முத்தரப்பு தொடரில் சாம்பியன்ஸ் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி கராச்சியில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் 29 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

மேலும், இந்தப் போட்டியில் அசாம் 10 ரன்கள் எடுத்தபோது ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6000 ரன்களைக் கடந்தவர் என்ற தென்னாப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லாவின் சாதனையையும் சமன் செய்தார். அதுமட்டுமின்றி இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சாதனையையும் முறியடித்துள்ளார் பாபர் அசாம்.

___________________________________________________________________________________________

பீட்டர்சன் மகனுக்கு கோலி பரிசு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி.  சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார். இந்த தொடரின் வர்ணனையாளர்கள் பட்டியலில் இங்கிலாந்து முன்னாள் வீரரான கெவிட் பீட்டர்சன் இடம் பெற்றிருந்தார். இங்கிலாந்து தொடரின் போது விராட் கோலி மற்றும் கெவிட் பீட்டர்சன் இருவரும் சந்தித்து பேசினர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்நிலையில், கெவின் பீட்டர்சனின் மகனுக்கு விராட் கோலி தனது ஜெர்சியை பரிசளித்துள்ளார்.

இது தொடர்பான தகவலை கெவின் பீட்டர்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வீட்டிற்கு வந்து, டைலன் பீட்டர்சனுக்கு விராட் கோலி அளித்த பரிசை கொடுத்தேன். இது அவருக்கு கையுறை போல பொருந்துகிறது. நன்றி நண்பா என பதிவிட்டுள்ளார்.

___________________________________________________________________________________________

ரஞ்சி கோப்பை: அரையிறுதி சுற்று 

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்குகிறது. 32 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரில் லீக் மற்றும் காலிறுதி சுற்று ஆட்டங்களின் முடிவில் குஜராத், கேரளா, விதர்பா மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த தொடரின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் வரும் 17-ம் தேதி ஆரம்பமாக உள்ளன.  அகமதாபாத்தில் நடக்கும்  முதலாவது அரையிறுதியில் குஜராத் - கேரளா  அணிகளும், நாக்பூரில் நடக்கும்  2-வது அரையிறுதியில் மும்பை - விதர்பா அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து