எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Ayodhy-Ramar 2024-01-31](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/12/Ayodhy-Ramar_2024-01-31.jpg?itok=BBXsl08n)
Source: provided
புதுடெல்லி : அயோத்தி ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகராக இருந்த ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் (87) நேற்று காலமானார். இவர், கடந்த 28 வருடங்களாக ரூ.100 ஊதியத்தில் ராமர் கோயிலில் பணியாற்றிவர்.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகராக இருந்தவர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ். இவருக்கு நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி பக்கவாதம் காரணமாக அயோத்தியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களுக்கு முன்பு மூளையில் திடீர் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், அவர் லக்னோவின் பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று காலை 8 மணியளவில் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தனது 87 வயதில் காலமானார். இவர் அயோத்தி ராமர் கோயில் கட்டும் பணியில் முக்கிய பங்காற்றிய, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினராகவும் இருந்தார். கடந்த டிசம்பர் 6, 1992-இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின், அங்குக் கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த தற்காலிக ராமர் கோயிலுக்கு அர்ச்சகராக பணியாற்றினார். அப்போது முதல், ராமருக்கான பிரமாண்டமான கோயிலில் குழந்தை ராம் லாலாவின் பிரதிஷ்டை செய்யப்பட்டது வரை சத்யேந்திர தாஸ் சாட்சியாக இருந்தவர்.
இதற்காக, அவருக்கு மாதம் வெறும் ரூ.100 மட்டுமே ஊதியமாக அளிக்கப்பட்டு வந்தது. சுமார் 28 ஆண்டுகளாக ஒரே தொகையை ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் பெற்று வந்தார். இதன் பிறகுதான் அவருக்கு ஊதியம் உயர்த்திக் கொடுக்கப்பட்டது. பாபர் மசூதி, ராமர் கோயில் மீதான மேல்முறையீட்டு உச்ச நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 19, 2018-இல் வெளியானது.
இதையடுத்து, உடனடியாக உருவான தற்காலிக கோயிலில் தலைமை அர்ச்சகராக சுமார் நான்கு ஆண்டுகள் ராம் லாலாவுக்குச் சேவை செய்தார். இதன் பிறகு, ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் முடிந்தும், அவர் ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகராக தொடர்ந்தார். உ.பி.யின் பண்டிதர்களில் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் மிகவும் படித்தவராகக் கருதப்படுகிறார். 1975-ஆம் ஆண்டு, ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் சமஸ்கிருத வித்தியாலயாவில் பட்டம் பெற்றார். இதன் அடுத்த ஆண்டான1976-இல், அயோத்தியின் சமஸ்கிருத மகாவித்யாலயாவில் உதவி ஆசிரியராக அவர் பணியும் பெற்றார். 1992-இல், பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் அவர் மார்ச் முதல் ராமர் கோயில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-02-2025.
12 Feb 2025 -
ஆப்கானில் திடீர் நிலநடுக்கம்
12 Feb 2025ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் பதிவாக உள்ளது.
-
அ.தி.மு.க. சின்னம் உள்ளிட்ட விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க அனுமதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
12 Feb 2025சென்னை: அ.தி.மு.க.
-
அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
12 Feb 2025புதுடெல்லி: அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் தேர்வாகிறார்..?
12 Feb 2025சென்னை: மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
-
இந்தியாவில் டிஜிட்டல் மாற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் சுந்தர் பிச்சை ஆலோசனை
12 Feb 2025பாரிஸ் : பாரிஸ் ஏஐ உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமர் மோடியை சந்தித்த கூகுள் நிறுவன சிஇஓ, பிரதமருடன் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் தொடர்பாக ஆலோசித்ததாகத் தெரிவித்துள்ளார்.
-
பணய கைதிகள் விவகாரம்: ஹமாசுக்கு நெதன்யாகு மிரட்டல்
12 Feb 2025ஜெருசலேம் : வருகிற 15-ம் தேதிக்குள் பணய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று ஹமாஸ் அமைப்புக்கு நெதன்யாகு மிரட்டல் விடுத்துள்ளார்.
-
இனி அரசியலுக்கு ‘நோ’: நடிகர் சிரஞ்சீவி உறுதி
12 Feb 2025ஐதராபாத் : வாழ்நாள் முழுவதும் இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று நடிகர் சிரஞ்சீவி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
பிரெஞ்சு மண்ணில் சாவர்க்கருக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி
12 Feb 2025பாரிஸ்: சாவர்க்கரை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்று கோரிய அக்கால பிரெஞ்சு ஆர்வலர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக மோடி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
-
நெடுஞ்சாலை பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
12 Feb 2025சென்னை: நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பராமரிப்பு பணிகளை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார்.
-
இலவசங்களால் மக்கள் உழைக்க தயாராக இல்லை சுப்ரீம் கோர்ட் கருத்து
12 Feb 2025புதுடெல்லி: நாட்டில் அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்களால் மக்கள் உழைக்க தயாராக இல்லை என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
-
பணய கைதிகள் விவகாரம்: மிரட்டல் விடுத்த டிரம்புக்கு ஹமாஸ் அமைப்பு பதிலடி
12 Feb 2025காசா : பணய கைதிகள் விவகாரம் மிரட்டலுக்கு இடமில்லை என டிரம்புக்கு ஹமாஸ் பதிலடி கொடுதத்துள்ளது.
-
சேலம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து: செல்போன் பேசியபடி பஸ்சை இயக்கிய ஓட்டுநர் பணி நீக்கம்
12 Feb 2025சேலம்: சேலம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்தில் செல்போன் பேசியபடி பஸ்சை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
-
பிரான்சில் முதல் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி
12 Feb 2025பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் மெர்சிலி நகரில் முதல் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
-
ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் ரெயில் சேவை ரத்து- தெற்கு தெற்கு ரெயில்வே அறிவிப்பு
12 Feb 2025சென்னை : ஹூப்பள்ளி-ராமேசுவரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரெயில் சேவை தற்போது ரத்துசெய்யப்பட்டுள்ளது.
-
மணிப்பூரில் 3 பயங்கரவாதிகள் கைது
12 Feb 2025இம்பால் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம்: எதிரான வழக்கை பிப். 19-ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
12 Feb 2025புதுடெல்லி : தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வரும் 19-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சுப்ர
-
பிரான்சில் புதிய இந்திய தூதரகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
12 Feb 2025பாரிஸ் : பிரான்ஸ் அதிபருடன் சேர்ந்து புதிய இந்திய தூதரகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
-
தே.மு.தி.க. மாநிலங்களவை உறுப்பினர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு: பிரேமலதா
12 Feb 2025சென்னை : அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக தே.மு.தி.க.
-
மாகி பௌர்ணமியை முன்னிட்டு பிரயாக்ராஜில் 1.60 கோடி பேர் நீராடல்
12 Feb 2025லக்னோ : மாகி பௌர்ணமியை முன்னிட்டு பிரயாக்ராஜில் 1.60 கோடி பேர் புனித நீராடி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
-
மகாராஸ்டிராவில் ஜி.பி.எஸ். நோய் பாதிப்பு 197 ஆக உயர்வு
12 Feb 2025புனே : மராட்டியத்தில் ஜி.பி.எஸ். தொற்று நோய் அதிகரித்து வருகிறது. இந்த நோயால் மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
28 ஆண்டு காலம் பணியாற்றிய ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் காலமானார்
12 Feb 2025புதுடெல்லி : அயோத்தி ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகராக இருந்த ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் (87) நேற்று காலமானார்.
-
தமிழகம் முழுக்க தி.மு.க.வுக்கு ஆதரவான சூழலே நிலவுகிறது : அமைச்சர் செந்தில்பாலாஜி கருத்து
12 Feb 2025சென்னை : தமிழகம் முழுக்க தி.மு.க.வுக்கு ஆதரவான சூழலே நிலவுகிறது. இது 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும்’ என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
புதிய வருமான வரி மசோதா இன்று பார்லி.யில் தாக்கல்
12 Feb 2025புது டெல்லி: புதிய, எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதாவை இன்று (பிப்.13) மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
-
வரும் 24-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு
12 Feb 2025சென்னை: கடந்த ஆண்டு சுதந்திர தினம் விழாவின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் ஜெனரக் மருந்துகளும், பிற மருந்துகளும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகைய