முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் நாள் அமர்வு தொடக்கம்

திங்கட்கிழமை, 10 மார்ச் 2025      இந்தியா
Parliament-1

டெல்லி, பரபரப்பான அரசியல் சூழலில், பாராளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட அமா்வு நேற்று காலை தொடங்கியது.

வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை விவகாரம், மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை, அமெரிக்க அதிபா் டிரம்ப் நிா்வாகத்தின் பரஸ்பர வரி அச்சுறுத்தல், மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கை என மத்திய அரசை குறிவைத்து பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு, இதுதொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரி முதல் நாளிலேயே பல்வேறு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர். கடந்த ஜனவரி 31-ம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்கியது. 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமா்வு பிப்ரவரி 13 நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட அமா்வு நேற்று முதல் ஏப்ரல் 4 வரை நடைபெறவுள்ளது. இதையடுத்து மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலாக்கப்பட்ட தற்கு பாராளுமன்ற ஒப்புதலைக் கோரும் தீா்மானத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தாக்கல் செய்யவுள்ளார்.

நாடு முழுவதும் வக்ப் வாரிய சொத்துகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா மீது பாராளுமன்ற கூட்டுக் குழு முன்மொழிந்த 14 திருத்தங்க ளுக்கு மத்திய அமைச்சரவை கடந்த பிப்ரவரியில் ஒப்புதல் வழங்கியது. வக்ப் மசோதாவை விரைந்து நிறைவேற்றுவது மத்திய அரசின் முன்னுரிமை என்று பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு அண்மையில் தெரிவித்தாா். அதேநேரம், எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த மசோதாவை எதிா்க்கும் என காங்கிரஸ் கூறியுள்ளது.

மும்மொழிக் கொள்கை, மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடா்பாக மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்துவரும் நிலையில், இந்த விவகாரங்களை எழுப்ப திமுக திட்டமிட்டுள்ளது. அதேநேரம், துணை மானியக் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் பெறுதல், பட்ஜெட் நடைமுறைகளை பூா்த்தி செய்தல், மணிப்பூா் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுதல், முக்கியத்துவம் வாய்ந்த வக்ப் மசோதாவை நிறைவேற்றுதல் ஆகியவை மத்திய அரசின் முன்னுரிமைகளாக உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து