முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை ரன்யா ராவுக்கு அரசு நிலம்: காங்கிரஸ் அமைச்சருக்கு தொடர்பா? கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு

திங்கட்கிழமை, 10 மார்ச் 2025      சினிமா      இந்தியா
Ranya-Rao-2025-03-10

பெங்களூரு, தங்கம் கடத்தல் வழக்கில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு அமைச்சருக்கு ரன்யா ராவுடன் தொடர்பு இருப்பது பற்றிய அதிர்ச்சி தகவல்கள் பரவி வருகிறது.

பிரபல தமிழ் பட நடிகையும், கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகளுமான நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து 12 கிலோ 800 கிராம் தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் ரன்யா ராவ் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே  இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. ரன்யா ராவ் போலீஸ் காவல் நேற்றுடன் நிறைவு பெற்றதால் அவரை மீண்டும் பெங்களூரு சிறப்பு பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே நேரத்தில்  சி.பி.ஐ. தரப்பில் ரன்யா ராவை காவலில் எடுத்து விசாரிக்க நேற்று  கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்த நிலையில், தங்கம் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பமாக ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு மந்திரிக்கு ரன்யா ராவுடன் தொடர்பு இருப்பது பற்றிய அதிர்ச்சி தகவல்கள் பரவி வருகிறது.

ரன்யா ராவ் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெரோடா இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தில் ரன்யா ராவ் மற்றும் அவரது சகோதரர் ரஷாப் ஆகியோர் இயக்குநர்களாக இருந்தனர். இந்த நிறுவனத்தின் பெயரில் தும்கூரில் உள்ள ஷிரா தொழிற்துறை பகுதியில் எக்கு மற்றும் டாட் பார் உற்பத்தி அலகு திறக்க நிலம் வழங்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரியிருந்தார். விண்ணப்பம் தாக்கல் செய்த 10 மாதங்களுக்குள் தும்கூரில் உள்ள ஷிரா தொழிற்துறை பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 12 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் ஒதுக்கியது. செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளுடன் தொடர்பு இல்லாமல் அரசாங்க நிலத்தை பெறுவது எளிதல்ல. தனது தந்தையின் செல்வாக்கு மற்றும் அரசியல் தலைவர் உதவியுடன் இந்த நிலத்தை அவர் வாங்கியுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது.

ரன்யா ராவுக்கு அரசு சார்பில் நிலம் ஒதுக்கி இருப்பதற்கான ஆவணங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து