முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பங்குச் சந்தை முறைகேடு புகார்: மாதவி புச் மீது நடவடிக்கை எடுக்க மும்பை ஐகோர்ட தடை

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2025      இந்தியா      வர்த்தகம்
Madhavi 2024-09-10

மும்பை, பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவா் மாதவி புரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக நான்கு வாரங்களுக்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவா் மாதபி புச், மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ.) நிா்வாக இயக்குநா் சுந்தரராமன் ராமமூா்த்தி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு ஊழல் தடுப்புப் பிரிவுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மாதபி புச், சுந்தரராமன் ராமமூா்த்தி உள்ளிட்டோா் மும்பை உயா்நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனா்.  இந்த நிலையில், மாதவி புச் உள்ளிட்டோரின் வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய புகார்தாரருக்கு 4 வாரங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது, அதுவரை மாதவி உள்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1992-ஆம் ஆண்டின் செபி சட்டம் மற்றும் அதன் விதிகள்-கட்டுப்பாடுகளுக்கு புறம்பாக பங்குச் சந்தையில் ஒரு நிறுவனம் முறைகேடாகப் பட்டியலிடப்பட்டதற்கு மாதபி புரி புச் உள்பட 6 பேரும் உடந்தையாக இருந்தனா். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அவா்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு ஊழல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சபன் ஸ்ரீவாஸ்தவா என்ற செய்தியாளா் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை கடந்த சனிக்கிழமை விசாரித்த மும்பை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், இது குறித்து விசாரித்து 30 நாள்களுக்குள் விசாரணை நிலவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து