முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனியின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா

திங்கட்கிழமை, 10 மார்ச் 2025      விளையாட்டு
India 2024-05-11

Source: provided

துபாய் : ஐ.சி.சி. தொடர்களின்  இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஒரே இந்திய கேப்டன் என்ற மகேந்திரசிங் டோனியின்   சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். 

சாம்பியன்ஸ் டிராபி...

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்று முன்தினம்  நடந்த இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்திய அணி சாம்பியன்...

பின்னர் 252 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கியது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்.

ரோகித் சர்மா சமன்...

இதன் மூலம் ஐ.சி.சி. தொடர்களின் (ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பைகள், சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்) இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஒரே இந்திய கேப்டன் என்ற மகேந்திரசிங் டோனியின் மாபெரும் சாதனையை ரோகித் சர்மா  சமன் செய்துள்ளார். அவர் 2011 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார். ஒட்டு மொத்தத்தில் இந்த சாதனையை படைத்த 4-வது கேப்டன் இவர் ஆவார். இதற்கு முன்னர் கிளைவ் லாயிட், ரிக்கி பாண்டிங், டோனி ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து