முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்களிடம் இருந்து வரி வசூலித்து விட்டு எங்களையே சிறுமைபடுத்துவதுதா..? - சிறப்பாக செயல்படும் தமிழகத்தை வஞ்சகம் செய்கிறது மத்திய அரசு - திருவள்ளூர் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 12 மார்ச் 2025      தமிழகம்
CM 2024-12-21

Source: provided

திருவள்ளூர் : எங்களிடம் இருந்து வரிவசூலித்துவிட்டு எங்களையே சிறுமைபடுத்துவதுதா..? என்று திருவள்ளூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பாக செயல்படும் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சகம் செய்கிறது என்று குற்றஞ்சாட்டினார்.

முதல்வர் தீர்மானம்...

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 5-ம் தேதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழக அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் பா.ஜ.க. அரசின் அநீதியை மக்களிடம் கொண்டு சென்று, அதன் பேராபத்தை எடுத்துக் கூற வேண்டும் என்றும், தொகுதி மறுசீரமைப்பினால் பாதிக்கப்படப் போகும் மாநிலங்களை ஒன்றிணைத்து கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்திட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கண்டன கூட்டம்....

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் நேற்று மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து மக்களிடம் எடுத்து கூறும் விதமாக "தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்  எனும் தலைப்பில் மாநிலம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என தி.மு.க. அறிவித்தது.இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக திருவள்ளூரில் நடைபெற்று வரும் கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

நிலைநாட்டுவோம்.... 

அப்போது அவர் கூறுகையில், வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும். மத்திய அரசிடம் பணிந்து செல்லும் முதுகெலும்பு அல்லாதவர்கள் அல்ல நாம்.. வாதாடியும், போராடியும் நமது உரிமைகளை நிலைநாட்டுவோம். மத்திய அரசு அனைத்து வகையிலும் நமக்கு தடைக்கல்லை போட்டு வருகிறது. நம் மொழி, நிலத்தை கெடுக்கின்ற எதிரிகள் எவராக இருப்பினும் துணிவுடன் எதிர்கொள்வோம். இப்படைத் தோற்கின், எப்படை வெல்லும் என்று மத்திய ஆட்சியாளர்களை நோக்கி கேட்கின்ற வகையில் தமிழினம் திரண்டுள்ளது.

கடுமையாக பாதிப்பு....

தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை அறிமுகப்படுத்த பார்க்கிறார்கள். தேசியக் கல்விக்கொள்கையை ஏற்றால் கலைக்கல்லூரி சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு நடத்துவார்கள். முந்தைய 10 ஆண்டுகால ஆட்சியாளர்களால் தமிழ்நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. வளைந்த முதுகோடு தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியின் காலடியில் அடகுவைத்த அவலம் நடந்தது. ஆனால் இப்போது, தி.மு.க. ஆட்சியின் எண்ணற்ற திட்டங்களால் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது.

பொறாமையோடு... 

அதிகாரப் பகிர்வுக்கு வழிகாட்டுவதே எனது அணுகுமுறையாக இருக்குமென பிரதமர் மோடி கூறியிருந்தார். மாநிலங்களின் பிரச்னை எனக்குத் தெரியும் என்று பிரதமர் கூறினாரே. அப்படி நடந்தாரா?. பிரதமர் மோடி தாம் கூறியதுபோல கடந்த 10 ஆண்டுகளில் நடந்து கொண்டிருக்கிறாரா?. ஒரு மாநில அரசு நாட்டிற்கே எடுத்துக்காட்டாக இருந்தால், அந்த மாநில அரசுக்கு துணை நிற்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால், பா.ஜ.க. அரசு தமிழ்நாடு தலைநிமிர்ந்து நடைபோடுகிறதே என்ற பொறாமையோடு செயல்படுகிறது.

அடிமைக் கூட்டமல்ல... 

தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தி.மு.க. காவலாக இருக்கிறதே என்ற எரிச்சலோடு உள்ளது. மத்திய அரசு நம்மை சிறுமைப்படுத்த பார்க்கிறது. பதவி சுகத்திற்காக மத்திய அரசிடம் பணிந்து போகும் முதுகெலும்பில்லாத அடிமைக் கூட்டமல்ல நாம். தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா?.. நாங்கள் உழைத்து, வரியை செலுத்திய பணத்தில் இருந்து எங்களுக்கான நிதியை தருவதில் என்ன பிரச்னை? மாணவர்களின் நலனுக்கான நிதியை கொடுக்காமல் இருப்பது நியாயமா?

நிதியை வழங்காமல்.... 

தேசிய கல்விக் கொள்கை என்பது கல்விக் கொள்கை அல்ல, காவிக் கொள்கை. இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வந்தது தான் தேசிய கல்விக் கொள்கை. முயற்சி- அதனால் தான் எதிர்க்கிறோம். ஜனநாயகம் குறித்து தமிழர்களுக்கு மத்திய அரசு பாடம் எடுக்க வேண்டாம். ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்து விட்டு 7 ஆண்டுகளாக கட்டாமல் இருப்பது தான் நாகரிகமா ? தமிழ்நாட்டில் பேரிடர் நடந்து 2 ஆண்டுகள் கடந்தும், நிதியை வழங்காமல் இழுத்தடிப்பது தான் நாகரிகமா ? இந்தியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதி தர மாட்டேன் என கூறுவதை விடவும் அராஜகம் இருந்து விட முடியுமா ? திமுக எம்பிக்களின் போர்க்குணத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு.

தமிழ்நாடு போராடும்....

தி.மு.க. ஆட்சியின் எண்ணற்ற திட்டங்களால் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது. தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடப்பதாக மத்திய அரசே அறிக்கைகள் மூலம் சொல்கிறது. கொள்ளைப்புறம் வழியாக வலதுசாரி சிந்தனைகளை தமிழ்நாட்டில் புகுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்கான குரலாக தி.மு.க. எப்போதும் ஒலிக்கும். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம். தமிழக உரிமைகளை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். மாநில உரிமைகளை பறிப்பதே மத்திய அரசின் எண்ணம். உயிரே போனாலும் பா.ஜ.க.வின் பாசிசத்துக்கு அடிபணிய மாட்டோம். அணி திரண்டால் மட்டுமே இந்தியாவை காப்பாற்ற முடியும். அதற்காக தமிழ்நாடு போராடும்.

உரிமைகளை பறிப்பதே.... 

சிறப்பாக செயல்படும் தமிழகத்திற்கு வஞ்சகம் செய்கிறது மத்திய அரசு. தமிழகம் சிறுமைப்படுத்தப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் மத்திய அரசு மற்றும் மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் மாநில அரசுகளை அழிக்கப்பார்க்கிறது. மாநில அரசுகளை பழிவாங்கு செயலை தான் மத்திய அரசு செய்கிறது. கல்வி நிதியை தராமல் வஞ்சிப்பது நியாயமா? தேசியக் கல்விக்கொள்கை எல்லோருக்குமானாதா? மாநில உரிமைகளை பறிப்பதே மத்திய அரசின் எண்ணம். உயிரே போனாலும் பா.ஜ.க.வின் பாசிசத்துக்கு அடிபணிய மாட்டோம். எங்களிடம் இருந்து வரிவசூலித்துவிட்டு எங்களையே சிறுமைபடுத்துவதுதா?சிறப்பாக செயல்படும் தமிழகத்தை வஞ்சகம் செய்கிறது மத்திய அரசு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக சரமாரி கேள்விகளை எழுப்பி காட்டமாக பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து