முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறந்த ஒருநாள் இந்திய அணியை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2025      விளையாட்டு
Gavaskar 2023 06 09

Source: provided

மும்பை : இந்தியாவின் சிறந்த 11 வீரர்கள் அடங்கிய ஒருநாள் கிரிக்கெட் அணியை சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார்.

இந்தியா சாம்பியன்...

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐ.சி.சி.  சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.

தோனி கேப்டன்...

 இந்த நிலையில் இந்தியாவின் சிறந்த 11 வீரர்கள் அடங்கிய அணியை சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். அந்த அணிக்கு கேப்டனாக எம்.எஸ். தோனி நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித்துக்கு கேப்டன் பதவி அளிக்கப்படவில்லை. தொடக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோகித் சர்மாவை கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். மூன்றாம் வரிசையில் விராட் கோலியும் நான்காம் வரிசையில் மொஹிந்தர் அமர்நாத் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 1983-ல் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வெற்றியில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் அமர்நாத் ஆட்டநாயகன் விருது பெற்றவர். 

பும்ரா இல்லை...

2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த யுவராஜ் சிங் ஐந்தாம் வரிசையிலும் மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஆறாம் வரிசையிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஏழாம் வரிசையில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கபில் தேவ், எட்டாம் வரிசையில் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அடுத்ததாக அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சமி மற்றும் ஜாகீர் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியில் பும்ரா தேர்வு செய்யப்படவில்லை. 

சுனில் கவாஸ்கர் தேர்வு செய்த ஆல்-டைம் ஒருநாள் போட்டி இந்திய அணி: சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, விராட் கோலி, மொஹிந்தர் அமர்நாத், யுவராஜ் சிங், தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), கபில் தேவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், முகமது ஷமி, ஜாகீர் கான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து