முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் இந்த நாட்டின், உலகத்தின் சொத்து: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

சனிக்கிழமை, 15 மார்ச் 2025      இந்தியா
Ashwini-Vaishnav 1

Source: provided

சென்னை : தமிழ் மொழி  இந்த நாட்டின் சொத்து. இந்த உலகத்தின் சொத்தும் கூட. அதில் நாம் பெருமையும் மகிழ்ச்சியும் அடைவோம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஸ்ரீபெரும்புதுாரில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: தமிழ் ஒரு இனிமையான மொழி. எனக்கு சில வார்த்தைகள் தான் தெரியும். வணக்கம், எப்படி இருக்கீங்க. நன்றி. நான் ஒரு அதிர்ஷ்டசாலி. நான் படித்த கான்பூர் ஐ.ஐ.டி.,யில் சடகோபன் என்ற பேராசிரியர் இருந்தார். அவர் தான் எனக்கு தமிழை அறிமுகப்படுத்தினார். தமிழ் கலாசாரத்தையும் அவர் அறிமுகம் செய்தார்.நாங்கள் அனைவரும் தமிழ் கலாசாரத்தையும், தமிழ் மொழியையும் மதிக்கிறோம்.

தமிழ், இந்த நாட்டின் சொத்து. இந்த உலகத்தின் சொத்தும் கூட. அதில் நாம் பெருமையும் மகிழ்ச்சியும் அடைவோம். அனைத்து இந்திய மொழிகளையும் கொண்டாடுவோம். இந்த உணர்வோடு தான் நம் பிரதமர் பணியாற்றி வருகிறார். இந்திய நாட்டில் பேசப்படும் ஒவ்வொரு மொழியும் அதற்குரிய மகத்தான இடத்தை பெற வேண்டும்.உரிய மரியாதை கிடைக்கச் செய்ய வேண்டும். உரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாடுபடுகிறார். நமது சகோதர உறவு, நட்புறவு, வேறுபட்ட நாகரிகங்களுக்கு இடையிலான உறவுகளில் எந்த ஒரு தடையும் வந்து விடக்கூடாது.

நம் நாட்டை வலிமையானதாக்கும் ஒற்றை இலக்குடன் தான் நாம் அனைவரும் பார்க்க வேண்டும்; பணியாற்ற வேண்டும். உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியாவை உயர்த்தவும், நமது வலிமையை உலகம் அங்கீகரிப்பதை உறுதி செய்யவும் நாம் பாடுபட வேண்டும்.இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து