எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, கடுமையான எதிர்ப்புகளையும் மீறி வக்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது இந்திய அரசமைப்பின் மீதான மத்திய அரசின் தாக்குதல் என்று சட்டப்பேரவையில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மசோதா நிறைவேற்றம்...
முன்னதாக, மக்களவையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்கு பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. இந்நிலையில், கடுமையான எதிர்ப்புகளையும் மீறி வக்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது இந்திய அரசமைப்பின் மீதான மத்திய அரசின் தாக்குதல். இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடரும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
கடும் பாதிப்புகளை...
கடந்த 27-03-2025 அன்று இந்த மாமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நாம் நிறைவேற்றினோம். இந்தியத் திருநாட்டின் மத நல்லிணக்கத்திற்கும் சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995-ஆம் ஆண்டின் வக்பு சட்டத்தினைத் திருத்துவதற்கு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்பு சட்டத் திருத்த முன்வரைவினை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானம் பாஜக நீங்கலாக அனைத்துக் கட்சிகளாலும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்றப்பட்டது.
முழுமையாக திரும்ப....
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகளால் இந்த வக்பு சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட்டது. இவை அனைத்தையும் மீறி பாராளுமன்ற மக்களவையில் வக்பு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக 232 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள். ஆதரவாக 288 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள். இந்தச் சட்டத் திருத்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டு இருந்தாலும் எதிர்த்து வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 232 என்பது சாதாரணமான எண்ணிக்கை அல்ல, எண்ணிக்கை கூடுதலாகக் கிடைத்து இருக்கலாம். ஆனால், இந்தச் சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல; முழுமையாகத் திரும்பப் பெற வேண்டியது என்பதுதான் நம் கருத்து. அதைத்தான் நாம் இங்கே தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பியிருந்தோம்.
கருப்புச் சின்னத்தை....
இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மைக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரு சில கூட்டணிக் கட்சிகளின் தயவால் அதிகாலை 2 மணியளவில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றி இருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் கட்டமைப்பின் மீது செய்யப்பட்ட தாக்குதல்; மதநல்லிணக்கத்தைக் குலைக்கும் செயல். இதனை உணர்த்தும் வகையில் கருப்புச் சின்னத்தை அணிந்து பேரவை நடவடிக்கைகளில் நாங்கள் பங்கெடுக்கிறோம்.
தமிழ்நாடு போராடும்...
சர்ச்சைக்குரிய இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். வக்பு வாரியத்தின் தன்னாட்சியை அழித்து, சிறுபான்மை இசுலாமிய மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு போராடும். போராடும், போராடும். அதில் வெற்றியும் பெறும். அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை சட்டபூர்வமாகவே தடுப்போம் என்று இந்த மாமன்றத்தில் உறுதி அளிக்கிறேன் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 6 days ago |
-
திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
03 Apr 2025சென்னை, தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையில் மக்களவையில் வக்பு திருத்த மசோதா நிறைவேற்றம்: ஆதரவு 288 - எதிர்ப்பு 232 பேர் வாக்களிப்பு
03 Apr 2025புதுடெல்லி, மக்களவையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்கு பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது.
-
தமிழகத்திற்கு நிதி பெறுவது தொடர்பாக பிரதமர் மோடியைஅமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பார்: துணை முதல்வர் உதயநிதி தகவல்
03 Apr 2025சென்னை, தமிழகத்திற்கு நிதி பெறுவது தொடர்பாக பிரதமர் மோடியைஅமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. சார்பில் வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
03 Apr 2025சென்னை, கடுமையான எதிர்ப்புகளையும் மீறி வக்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது இந்திய அரசமைப்பின் மீதான மத்திய அரசின் தாக்குதல் என்று சட்டப்பேரவையில் தெரிவ
-
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
03 Apr 2025சென்னை, தமிழக மீனவர்கள் நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை மீட்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம
-
மும்பை வீரருக்கு அழைப்பு
03 Apr 2025ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல நகரங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
-
சட்டசபைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வருகை
03 Apr 2025சென்னை, தமிழக சட்டசபைக்கு தி.மு.க. உறுப்பினர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்தனர்.
-
நீலகிரி இ-பாஸ் கட்டுப்பாடு: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மறு ஆய்வு மனு
03 Apr 2025சென்னை, நீலகிரி இ-பாஸ் கட்டுப்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜாஸ் பட்லர் அதிரடி அரை சதம்: ஆர்.சி.பி.யை வீழ்த்தியது குஜராத்
03 Apr 2025பெங்களூரு: ஜாஸ் பட்லர் அதிரடி காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி.யை வீழ்த்தியது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-04-2025.
04 Apr 2025 -
பிரதமர் நரேந்திரமோடி இலங்கை பயணம்: சிறைபிடிக்கப்பட்ட படகுகள் விடுவிப்பு..?
04 Apr 2025கொழும்பு : இலங்கை வசம் உள்ள 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், இந்திய மீனவர்களை விடுதலை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தமிழ்நாட்டில் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
04 Apr 2025சென்னை, தமிழகத்தில் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
நகைக்கடன் புதிய விதிமுறைக்கு எதிராக வழக்கு: ரிசர்வ் வங்கி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
04 Apr 2025மதுரை, வங்கிகளில் நகைக் கடன்களை வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பிக்கும் முறையை ரத்து செய்யும் சுற்றறிக்கையை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி தலைமை பொ
-
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கு ரத்து
04 Apr 2025சென்னை : அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கு ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
-
27 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக இந்தியா மீதான வரியை குறைத்தது அமெரிக்கா
04 Apr 2025வாஷிங்டன் : இந்தியா மீதான வரியை 26 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது.
-
நீட் தேர்வு விவகாரத்தில் எத்தனை நாட்கள் மக்களை ஏமாற்றுவீர்கள்? எடப்பாடி பழனிசாமி கேள்வி
04 Apr 2025சென்னை, நீட் தேர்வு விவகாரத்தில் எத்தனை நாட்கள் தான் நாட்டு மக்களை ஏமாற்றுவீர்கள் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ஏவுதளம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
04 Apr 2025புதுடெல்லி : ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
-
போக்சோ வழக்குகளுக்காக 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்: அமைச்சர்
04 Apr 2025சென்னை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை (போக்சோ) விசாரிக்க சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, ஈரோடு உள்பட 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்
-
அமெரிக்காவின் வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு: பார்லி. வளாகத்தில் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
04 Apr 2025புதுடெல்லி, அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
-
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு
04 Apr 2025சென்னை, தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் தாக்கல் செய்திருந்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்த
-
பிரதமர் மோடியுடன் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சந்திப்பு
04 Apr 2025பாங்காக், தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டின் இடையே, பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸும் சந்தித்துப் பேசின
-
வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்: பிரதமர் மோடி
04 Apr 2025புதுடெல்லி, “வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்கள், முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்.
-
பிம்ஸ்டெக் நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்த 21 அம்ச செயல் திட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு
04 Apr 2025பாங்காக், பிம்ஸ்டெக் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த 21 அம்ச செயல் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்துள்ளார்.
-
இளைஞர்களை வெறும் டெலிவரி நபர்களாக மட்டுமே உருவாக்கி கொண்டிருக்கிறோம்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விரக்தி
04 Apr 2025புதுடெல்லி, இளைஞர்களை வெறும் டெலிவரி நபர்களாக மட்டும் உருவாக்கி நாம் திருப்திப்பட்டுக் கொள்ளப் போகிறோமா? இதுதான் இந்தியாவின் விதியா?
-
தென்காசி காசிவிசுவநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த ஐகோர்ட் கிளை அனுமதி
04 Apr 2025தென்காசி : தென்காசி காசிவிசுவநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீக்கியுள்ளது.