முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாய் சுதர்ஷனுக்கு பாராட்டு

வியாழக்கிழமை, 3 ஏப்ரல் 2025      விளையாட்டு
3-Ram-52

Source: provided

அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் சாய் சுதர்ஷனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தமிழக வீரர்...

 தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன் ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சின்னசாமி திடலில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ச்சியாக 4ஆவது அரைசதம் அடிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹேசில்வுட் பந்தில் கீப்பருக்கு மேலாக ரேம்ப் ஷாட்டில் ஆட்டமிழந்தார். 28 இன்னிங்ஸில் 1 முறை மட்டுமே ஒற்றை இலக்க எண்ணில் ஆட்டமிழந்துள்ளார். மற்ற அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் இவருக்கு இந்தியா முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பாராட்டு...

இந்த ஐ.பி.எல். சீசனில் மட்டும் 186 ரன்களை குவித்து அதிக ரன்கள் பட்டியலில் 2ஆம் இடம் பிடித்துள்ளார். 189 ரன்களுடன் நிகோலஸ் பூரன் முதலிடத்தில் இருக்கிறார். ஒட்டுமொத்தமாக 28 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 1,220 ரன்களை எடுத்துள்ளார். 8 அரைசதங்கள், 1 சதத்துடன் சராசரி 48.8ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago
View all comments

வாசகர் கருத்து