முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் சிவன் கோயிலில் 18 ஆயிரம் பக்தர்கள் வழிபாடு

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2012      ஆன்மிகம்
Image Unavailable

ஜம்மு,ஜூன்.27 - அமர்நாத் குகைக்கோயிலில் பனி லிங்கத்தை கடந்த 3 நாட்களில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டுள்ளனர்.  இமயமலையில் உள்ள அமர்நாத்தில் சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இயற்கையாகவே உருவாகியுள்ள பனி லிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்வார்கள். அதாவது குளிர்காலம் தொடங்குவதற்குள் பக்தர்கள் ஜம்மு வழியாக அமர்நாத் கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள். பக்தர்களுக்கு பாதுகாப்புக்கு இரண்டு அடக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வழிநெடுகிலும் மத்திய ரிசர்வ் படையினரும் எல்லை பாதுகாப்பு படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். அமர்நாத் குகைக்கோயிலானது இமயமலையில் சுமார் 3 ஆயிரத்து 900 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்தாண்டு கடந்த 3 தினங்களுக்கு முன்பு வழிபாடு தொடங்கியது. இந்த 3 நாட்களில் மட்டும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கோயிலுக்கு சென்று பனி லிங்கத்தை வழிபட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். யாத்திரையானது எந்தவித இடையூறும் இல்லாமல் அமைதியாக நடந்து கொண்டியிருக்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்