முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகிரி வீட்டிற்கு பாதுகாப்பு குறைப்பு ஏன்? காவல்துறை விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஏப்.3 - மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு அளித்து வந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டதற்கு போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். 11 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 37 போலீசார் இருந்தனர். கூடுதலாக இருந்த 26 போலீசார் மட்டுமே விலக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழக அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு முறைகளை தேர்தல் ஆணையம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிரடியாக மாற்றி அமைத்தது. இதுவரை தமிழக போலீசார் மட்டும் பாதுகாப்பு அளித்து வந்தார்கள். இப்போது ஒரு தமிழக சப்- இன்ஸ்பெக்டர், 4 மத்திய போலீஸ் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளார்கள். இதேபோல தமிழகத்தில் உள்ள  மத்திய அமைச்சர்களின் பாதுகாப்பு முறைகளிலும் மாற்றம் செய்யப்பட்டது. ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அழகிரியின் பாதுகாப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு தேர்தல் கமிஷனே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்டுவதாவது:-

மத்திய அமைச்சர் ஒருவருக்கும், அவரது வீட்டிற்கும் பாதுகாப்பு அளிக்க 11 போலீசார் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். இதில் ஒரு சப்- இன்ஸ்பெக்டரும், 4 போலீஸ்காரர்களும் கூடவே செல்வார்கள். ஒரு ஏட்டு தலைமையில் 4 போலீஸ்காரர்கள் வீட்டுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள். இதைத் தவிர ஒரு தனிப் பாதுகாப்பு அதிகாரியும் இருப்பார்.  இவர், சப்- இன்ஸ்பெக்டர் அந்தஸ்து கொண்டவராக இருக்க வேண்டும். ஆனால் அழகிரிக்கும், அவரது வீட்டு பாதுகாப்புக்கும் சேர்த்து 37 போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். அதாவது, 26 போலீசார் கூடுதலாக அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த கூடுதல் போலீசார் அனைவரும் வாபஸ் பெறப்பட்டுள்ளார்கள். தற்போது அவர்களுடன் செல்லும் வாகனத்தில் குறித்த அளவு போலீசார் எண்ணிக்கு குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் மத்திய போலீசார் பாதுகாப்பிற்கு செல்வார்கள் என கூறப்பட்டுள்ளது.  

நடைமுறை  இவ்வாறு இருக்க, ஏதோ போலீசார் அனைவரையும் விலக்கி விட்டது போல் குடும்ப தொலைக்காட்சியிலும், தாத்தா தொலைக்காட்சியிலும் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இவர்தான் அஞ்சாநெஞ்சனாயிற்றே, பின் ஏன் போலீஸ் காவல் விலக்கப்பட்டால் அலறுகிறார். அப்படியானால் இவர் வீட்டுக்கு வரும் கட்சிக்காரர்களையே இவர் நம்பவில்லையா என்று செய்தியை படித்த ஒரு நபர் கமெண்ட் அடித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்