முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மர் எதிர்க்கட்சி தலைவர் டெல்லி வருகை

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,நவ.15 - மியான்மர் நாட்டு எதிர்க்கட்சி தலைவரும் ஜனநாயகவாதியுமான ஆங் சன் சூ கியு 5 நாள் பயணமாக நேற்றுமுன்தினம் புதுடெல்லி வந்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி அழைப்பின்பேரில் அவர் புதுடெல்லி வந்துள்ளார். 

மியான்மர் நாட்டில் 1989-ம் ஆண்டில் இருந்து ராணுவ ஆட்சி இருந்து வருகிறது. ராணுவ ஆட்சியை எதிர்த்தும் ஜனநாயகத்தை மீண்டும் மலர செய்யவும் பெண்மணி ஆங் சன் சூ கியு கடந்த 25 ஆண்டுகளாக போராடி வருகிறார். இவர் சுமார் 20 ஆண்டு காலம் மியான்மர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உலக நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார். இந்த ஆண்டு நடைபெற்ற அந்த நாட்டு பொதுத்தேர்தலில் ஆங் தலைமையிலான கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது. அதனால் மியான்மரில் விரைவில் ஜனநாயகம் மலரக்கூடும். அவரது உறுதி தன்மையை பாராட்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஜவஹர்லால் நேரு நினைவு சொற்பொழிவு ஆற்றுவதற்காக வரும்படி ஆங்கிற்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்தார். அதற்கான கடிதத்தை கடந்த மே மாதம் மியான்மர் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், ஆங்கை சந்தித்து கொடுத்தார். இந்த அழைப்பிதழை ஏற்று ஆங், கடந்த திங்கள் அன்று இரவு புதுடெல்லிக்கு 5 நாள் பயணமாக வந்துள்ளார். புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பல முக்கிய தலைவர்களை ஆங் சந்தித்து பேசுவார். அவர் படித்த ஸ்ரீராம் கல்லூரிக்கும் செல்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்