முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடிக்கு விசா: அமெரிக்க முடிவில் மாற்றமில்லை

சனிக்கிழமை, 6 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஏப். 7 - குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா தருவதில்லை என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க எம்.பி.க்கள் குழு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் கடந்த வாரம் சந்தித்தது. அப்போது தொழில், வர்த்தகம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இதையடுத்து அமெரிக்காவுக்கு வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்தது அந்த குழு. அமெரிக்க எம்.பி.க்கள் அழைப்பு விடுத்துள்ளதால் மோடிக்கு விசா தரப்படுமா என்ற கேள்விக்கு அமெரிக்க வெளியுறவு செயலாளர் விக்டோரிய துலாண்ட் பதில் அளித்த போது, 

கலாசாரம், தொழில், வர்த்தகம் உள்ளிட்ட விஷயங்களில் இரண்டு நாடுகளுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே அமெரிக்க குழு இந்தியா சென்றது. இது போன்ற பயணங்கள் இரு நாடுகளுக்கும் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். 

அமெரிக்க குழு அழைப்பு விடுத்ததால் நரேந்திர மோடிக்கு உடனே விசா வழங்கப்படாது. அமெரிக்காவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே யாருக்கும் விசா வழங்கப்படும். ஆனாலும் விசாவுக்காக மோடி விண்ணப்பித்தால் நாங்கள் அதை வரவேற்று நிச்சயம் பரிசீலிப்போம். இந்த விவகாரத்தில் முன்கூட்டியே எதையும் தீர்மானம் செய்து விட முடியாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்