முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கடற்படையில் புதிய ஜெட் போர் விமானம்

சனிக்கிழமை, 11 மே 2013      அரசியல்
Image Unavailable

 

ஹன்சா (கோவா),மே.12 - இந்தியா ராணுவத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கடற்படையில் புதிய ஜெட் மிக்ரக27 போர் விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ரக விமானங்கள் ஒலியைவிட வேகமாக சென்று எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கவல்லது. இதை ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி நேற்று தொடங்கிவைத்தார். 

நாட்டை சுற்றி எதிரி நாடுகள் இருப்பதால் ஆயுதபலத்திலும் இந்தியா முன்னேற வேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய ராணுவத்தின் கடற்படையானது எல்லையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனையொட்டி கடற்படையில் நீர்மூழ்கி கப்பல்கள், விமானம் தாங்கி கப்பல்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. விமானந்தாங்கி கப்பல்களில் இருந்து அணு ஆயுதங்களை ஏந்தி சென்று ஒலியை விட வேகமாக சென்று எதிரிகளின் இடத்தை தாக்க வல்ல 27 மிக்ரக ஜெட் போர் விமானங்கள் நேற்று கடற்படையில் புதியதாக சேர்க்கப்பட்டது. இதற்கான விழா கோவா மாநிலத்தில் உள்ள ஹன்சா விமானப்படை தளத்தில் நடந்தது. இந்த விழாவில் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி கலந்துகொண்டு முறைப்படி  தொடங்கிவைத்தார். இந்த ரக போர் விமானங்கள் ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்டதாகும். இந்த போர் விமானங்கள் கடந்த 2010-ம் ஆண்டே வந்துவிட்டது. அந்த விமானங்களை அனைத்து வகையிலும் பரிசோதித்து பார்க்கப்பட்டது. அதன் செயல்பாடுகள் திருப்தி கரமாக இருக்கிறது. அதன் பின்னர் முறைப்படி இந்திய கடற்படையில் இந்த ஜெட் மிக்ரக போர் விமானங்களை சேர்க்கும் விழா நடந்தது. இதில் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி கலந்துகொண்டு தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறுகையில் கடற்படையின் வைரவிழா கொண்டாடப்பட்டு வரும் இந்தநேரத்தில் ஜெட் மிக்ரக போர் விமானங்கள் சேர்க்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். நாட்டின் எல்லைப்பகுதியை பாதுகாப்பதில் கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. கடற்படை எதிர்கொண்டுள்ள சவால்களை சமாளித்து வெற்றிபெற மத்திய அரசு அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்கும் என்றும் அவர் மேலும் கூறினார். 

இந்த மிக்ரக போர் விமானங்கள் ஏவுகணைகளையும் அணுகுண்டுகளையும் ஏந்திச்சென்று பல வழிகளிலும் தாக்க வல்லதாகும். வானத்தில் பறந்துகொண்டியிருக்கும்போதே எரிபொருளை நிரப்பிக்கொள்ளும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்