முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர மாநில காங். பொறுப்பாளராக திக் விஜய்சிங் நியமனம்

திங்கட்கிழமை, 17 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத்,ஜூன்.18 - ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் பொது செயலாளருமான திகவிஜய்சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது. இதற்காக கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கட்சி நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செயத அஜய்மக்கான் மற்றும் சி.பி.ஜோஷி ஆகியோர் அக்கட்சியின் பொது செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

குலாம் நபி ஆசாத், ஆஸ்கார்பெர்னாண்டஸ் ஆகியோர் பொது செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். குலாம் நபி ஆசாத் வசம் இருந்த ஆந்திர காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் பொது செயலாளர்களில் ஒருவருமான திக்விஜய்சிங் நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகா மற்றும் கோவா மாநில காங்கிரசும் இவரது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்