முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஆன்டி முர்ரே, சுவெட்லானா 2 -வது சுற்றுக்கு முன்னேற்றம்

புதன்கிழமை, 22 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூன். - 22  - விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் சுற்றில் இங் கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே மற்றும் மகளிர் பிரிவில் ரஷ்ய வீராங்க னை சுவெட்லானா ஆகியோர் வெற்றி பெற்று 2 -வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். இந்த வருடத்தின் 3 -வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்ட ன் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் கடந் த 2 நாட்களாக அமோகமாக நடைபெற்று வருகிறது. 125 - வது ஆண்டாக இந்தப் போட்டி நடைபெறுகிறது.  இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித்துள்ளனர். இதற்காக அவர்கள் தீவிர பயிற்சி எடுத்து உள்ளனர். 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இது தற்போது காலிறுதியை நோக்கி முன்னேறி வருகிறது. முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் தரமான ஆட்டத்தை ரசிகர்கள் கண்டு வியப்பில் ஆழந்துள்ளனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்று நடந்த து. இதில் இங்கிலாந்தின் முன்னணி வீரரான ஆன்டி முர்ரேவும், ஸ்பெ யின் வீரர் டேனியலும் மோதினர். 

இந்தப் போட்டியில் உலகின் 4 -ம் நிலை வீரரான முர்ரே அபாரமாக ஆடி, 4 - 6, 6 - 3, 6 - 0, 6 - 0 என்ற செட் கணக்கில், டேனியலை தோற் கடித்து 2 - வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 

மற்ற ஆட்டங்களில் நம்பர் - 1 வீரரான ரபேல் நடால், 6 -ம் நிலை வீர ரான தாமஸ் பெர்டிச், 10 - ம் நிலை வீரரான மார்டி பிஷ், 14 -ம் நிலை வீரரான வாவெர்னிகா ஆகியோர் வெற்றி பெற்று 2 -வது சுற்றுக்குள் நுழைந்தனர். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் ரஷ் யாவின் முன்னணி வீராங்கனையான சுவெட்லானா குஜ்னெட்சோ வாவும், சீன வீராங்கனை சுவாய் சாங்கும் மோதினர். 

இதில் அனுபவமிக்க வீராங்கனையான சுவெட்லானா சிறப்பாக ஆடி, 3 - 6, 6 - 3, 6 - 4 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை சாங்கை தோற்கடித்தார். ரஷ்ய வீராங்கனை உலகின் 12 -ம் நிலை வீராங்கனை யாவார். 

இதோ போல 2 -ம் நிலை வீராங்கனையான ஜூவான் ரேவா, 6 -ம் நிலை வீராங்கனையான பிரான்செஸ்கா, வீனஸ் வில்லியம்ஸ் ஆகி யோர் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2 - வது சுற்றுக்கு முன்னேறினர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்