முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச வேஷ்டி - சேலை திட்டத்துக்கு ரூ. 269 கோடி

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஆக.6 - இலவச வேஷ்டி, சேலை திட்டத்துக்கு ரூ. 269 கோடி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ஒவ்வோர் ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2012 ம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி 159.04 லட்சம் சேலைகளும், 158.19 லட்சம் வேஷ்டிகளும் பயனாளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக 269 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

வேளாண் தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 2005 ம் ஆண்டில் தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டது. இப்போது 1.09 லட்சம் பயனாளிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த திட்டம் புதுப்பொலிவுடன் செயல்படும் வகையில் சீரமைக்கப்பட்டு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இதற்காக ரூ. 166 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்