முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி. பா.ஜ.க.தலைவரை கைது செய்ய காங்கிரஸ் கட்சி கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

போபால். நவ. 13. காங்கிரஸ் தொண்டர்களை தாக்க தூண்டி விட்டதாக கூறி மத்திய பிரதேச மாநில பா.ஜ.க. தலைவரை கைது செய்யும்படி அம்மாநில காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் புதிதாக கட்டப்பட்டிருந்த ஒரு ரோட்டின் திறப்பு  விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளும் பா.ஜ.க. சார்பில் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அப்போது அந்த வார்டின் காங்கிரஸ் பெண் கவுன்சிலரும்  மேடையில் இருந்தார். அப்போது பா.ஜ.க. தலைவர் ஒருவரின் பேச்சுக்கு அந்த பெண் கவுன்சிலர் தனது கண்டனத்தை நேரடியாகவே மேடையில் தெரிவித்தார். இதை அடுத்து  அந்த பெண் கவுன்சிலர் மேடையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அப்போது அந்த பெண் கவுன்சிலர் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அங்கே கூயிருந்த  அந்த பெண் கவுன்சிலரின் ஆதரவாளர்கள் பா.ஜ.க.வின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அப்போது காங்கிரஸ் தொண்டர்களை அடித்து விரட்டுமாறு மேடையில் இருந்த மாநில பா.ஜ.க. தலைவர்  பிரபாத் ஜா கட்டளையிட்டார். இதையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் மீது  பா.ஜ.க. தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது காங்கிரஸ் தொண்டர்களும் அவர்கள் மீது பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இதில் இரு தரப்பிலும் 12 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு  காரணம் பிரபாத் ஜாதான் என்றும் அவரை உடனே  கைது செய்ய வேண்டும் என்றும் மாநில காங்கிரஸ்  கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மானக் அகர்வால் கூறுகையில்  பிரபாத் ஜா உத்தரவின் பேரிலேயே காங்கிரஸ் தொண்டர்கள் மீது பா.ஜ.க.தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர் என்றும் எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை  கைது செய்ய  வேண்டும் என்றும்  கோரிக்கை விடுத்துள்ளார். மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சத்யதேவ் கத்தாரே கூறுகையில்,  இந்த தாக்குதலை நடத்தியது பா.ஜ.க.வினர்தான் என்றும் ஆனால் 100 காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்