முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் நலன் காத்தால் பாராட்டுவோம்: தா.பாண்டியன்

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.3 - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழக கேரள அரசுகளின் முதல்வர்கள் இது சம்பந்தமாக கூடிப்பேசி முடிவெடுத்திட வேண்டும் இருமாநிலத்து மக்களும் சகோகரர்களாதப் பழகி வருகிறார்கள். அதற்கு ஊறு விளைவிப்பதான கருந்துகளை  சொல்வதாக அமைந்துவிடக் கூடாது.

சில்லரை வணிகத்தில் அன்னியமுதலீடு வேண்டுமென்று மக்களோ, வணிகர்களோ, அரசியல் கட்சிகளோ யாரும் கேட்கவில்லை. இது குறித்து மத்திய அரசு இவர்களுடனோ அல்லது நாடாளுமன்றத்திலோ அமைச்சர்களிடத்திலோ எந்த ஒரு கருத்தையும் ஒப்புதலையும் பெற்றிடாமல் வெளிநாட்டு முதலாளிகளுக்கு மொத்தவிற்பனையாக சில்லரை வணிகத்தை விற்றுவிட துணிந்துள்ளது. இதற்கான வலுவான  எதிர்ப்பு அரசுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்கள் மீதான போர்க் குற்றம் குறித்தும், கச்சத்தீவு குறித்தும், தூக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக்கிட வேண்டும் என்றெல்லாம் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த அதிமுக அரசைப் பாராட்டினோம்.

அதே அரசு சமச்சீர் கல்வியை அமல்படுத்த தயக்கம் காட்டியபோது அதனை கட்டாயமாக்கிட வேண்டுமென்று அதிமுக அரசை வலியுறுத்தினோம். விலைவாசி உயர்வு, மக்கள் நலப்பணியாளர்கள் வேலை பறிப்பு, ஆகியவற்றை அதிரடியாக நடத்திட்ட அதிமுக அரசைக் கண்டித்து வருகிறோம் விலைவாசியைக் குறைத்திட வேண்டும். மக்கள் நலப் பணியாளர்களின் குடும்ப நிலைமையினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மீண்டும் பணி அளித்திட வேண்டும் என்று வலியுறுத்திவருகிறோம்.

கனிம சுரங்கம் குவாரி சம்பந்தமான 300 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அரசியல் காழ்ப்புணர்வுடன், உரிமம் முறைப்படி பெறப்பட்டிருந்தாலும் குவாரி தொழில் செய்திட அனுமதி. மறுக்கப்பட்டு கொலை மிரட்டல் எல்லாம் விடப்பட்டுள்ளதாக பலர் தெரிவித்து வருகிறார்கள். முறையான  ஆவணங்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு  உள்ளிட்டவைகள் சரியான படி இருந்தால் குற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிடலாம். அல்லது nullதிமன்றங்களில் முறையீடு செய்யலாம்.  என்றே நாங்களும் சொல்லி வருகிறோம். ஈரோட்டில் இரண்டு மூன்று நாட்களுக்குமுன்பு கூட இது குறித்தான புகார்களை என்னிடம் தெரிவித்தார்கள்.

மற்றும் பல்வேறு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தா.பாண்டியன் பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்