முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி., நாளை கூடுகிறது: 67 மசோதாக்களை நிறைவேற்ற முடிவு

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாராளுமன்றம் வரும் திங்கட்கிழமை 24ம் தேதி அதாவது நாளை கூடுகிறது. டிசம்பர் 23் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
இது 22 அமர்வுகளை கொண்டதாக இருக்கும். இதில் ஏற்கனவே நிறைவேற்றப்படாமல் இருக்கும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட 67 மசோதாக்கள் இந்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளன. இவற்றில் 9 மசோதாக்கள் கடந்த கூட்டத் தொடரின் போது அறிமுகம் செய்யப்பட்டது. 40 மசோதாக்கள் கடந்த ஆட்சியின் போது அறிமுகம் செய்யப்பட்டவை. 18 மசோதாக்கள் அதற்கு முன்பு நிறைவேற்றப்படாமல் இருப்பவை. நிலுவையில் உள்ள 67 மசோதாக்களில் 11 மசோதாக்கள் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் பற்றியவை. 9 மசோதாக்கள் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்புடையவை. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான மசோதாக்கள் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டவை. கட்டிடங்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர் தொடர்பான மசோதா 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த கூட்டத்தொடரை அமைதியாக நடத்துவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ராமகாஜன் கூட்டுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து