எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச், - 21 - தேர்தல் புறக்கணிப்பு என்ற ம.தி.மு.க.வின் முடிவை வைகோ மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரலாறு காணாத ஊழலில் திளைத்து வரும் தி.மு.க.வும், காங்கிரசும் கூட்டணி சேர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும், தி.மு.க. தலைமையிலான மாநில அரசும் கடைபிடித்து வரும் தவறான பொருளாதாரக்கொள்கையினால் விலைவாசி உயர்வு, விவசாயத்தில் சரிவு, மின்வெட்டு, தொழில் நலிவு, வேலையின்மை போன்ற பிரச்சனைகளினால் மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.
மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கையை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் ம.தி.மு.க.வின் பங்களிப்பு முக்கியமானது. நடக்கவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் ஊழல் கூட்டணியான தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவது என்பது மக்கள் முன்னுள்ள முக்கியமான கடமையாக உள்ளது. இத்தகைய மகத்தானப் போராட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. தலைமையில் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் உள்ளிட்ட பல கட்சிகள் அணிவகுத்து ஓரணியில் நிற்கின்றன.
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை முறியடிப்பதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் முக்கியமான பங்குள்ளது. இச்சூழலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு, புதுவை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று எடுத்துள்ள முடிவு வேதனையளிக்கிறது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனது முடிவை மறுபரிசீலனை செய்து அ.தி.மு.க.வின் தலைமையிலான அணியோடு இணைந்து, ஊழலில் திளைத்து வரும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்திடும் ஜனநாயகப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ம.தி.மு.க. தலைமைக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம்பெற்றுவந்த ம.தி.மு.க. தற்போது தேர்தலை புறக்கணிப்போம் என்று முடிவு எடுத்திருப்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஊழல் மிகுந்த மக்கள் விரோத தி.மு.க.காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க, ம.தி.மு.க.வும் அதன் பொதுச் செயலாளர் வைகோவும் தாங்கள் எடுத்துள்ள முடிவை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் இதற்கான சுமுகத் தீர்வை உருவாக்கித்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
எல்லை முழுவதும் பாதுகாப்பாக உள்ளது: ராஜ்நாத் சிங் மகிழ்ச்சி
02 May 2024பாட்னா : இந்தியாவின் எல்லை முழுவதுமாக பாதுகாப்பாக உள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
இட ஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு ரகசியமாக பறித்து வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு
02 May 2024புதுடில்லி : அரசுப் பணிகளை ஒழித்து தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பா.ஜ.க.