முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் பாக். அத்துமீறல் - இந்திய ராணுவம் தக்க பதிலடி

புதன்கிழமை, 31 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

ஜம்மு : வடக்கு காஷ்மீரின் தாங்கார் செக்டார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியருகே இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதலில் பொதுமக்களில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

வடக்கு காஷ்மீரின் தாங்கார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் பொதுமக்களில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

முன்னதாக, காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியருகே இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 10 வயது சிறுவன் உயிரிழந்ததுடன் 2 பேர் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து திங்கள்கிழமையும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. தற்போது தொடர்ந்து 3-ஆவது நாளாக ரஜெளரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், நேற்று புதன்கிழமை 4-ஆவது நாளாக வடக்கு காஷ்மீரின் தாங்கார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்துள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து