முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சின் எம்.பி.யாக நியமனம்: தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதன்கிழமை, 16 மே 2012      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, மே. - 16 - மாநிலங்களவை உறுப்பினராக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்படுவதற்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறி விட்டது. எனினும் இது தொடர்பாக ஐகோர்ட்டை அணுகுமாறும் மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.  டெல்லியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ராம்கோபால்சிங் சிசோடியா என்பவர் சச்சினின் நியமனத்தை எதிர்த்து இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். அரசியலமைப்பின் சட்ட விதி 80 ன் படி கலை, இலக்கியம், அறிவியல் ஆகியவற்றில் தலைசிறந்தவர்களையே மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்க முடியும். அதன்படி சச்சினை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்க முடியாது என்று அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.  இந்த மனு நீதிபதிகள் தீபக் வர்மா, முகோபாத்யா ஆகியோரடங்கிய விடுமுறை கால பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அரசியலமைப்பின் சட்ட விதி 32 ன் படி ஏன் நேரடியாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தீர்கள். இது தொடர்பாக ஐகோர்ட்டை அணுகி இருக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதையடுத்து ஐகோர்ட்டை அணுக வசதியாக மனுவை திரும்ப பெற்றுக் கொள்ள நீதிபதிகள் வாய்ப்பளித்தனர். இதை ஏற்றுக் கொண்ட மனுதாரரின் வழக்கறிஞர் மனுவை திரும்ப பெற்றுக் கொண்டார்.  மேலும் தனது மனுவில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்படும் ஒரு நபர் நியமனத்துக்குப் பின் நிதி சலுகைகளையும், ஏனைய உரிமைகளையும் பெறுவார். மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட தகுதியற்ற ஒருவருக்கு அந்த சலுகைகள் போய் சேரக்கூடாது. வரி செலுத்துவோரின் பணம் நியமிக்கப்படும் தகுதியற்றவருக்கு செல்லக் கூடாது. மனுதாரர் வருமான வரி செலுத்துபவர். குடிமக்களால் செலுத்தப்படும் வரி பணம் அரசியலமைப்பின் படிதான் செலவழிக்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்