முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாறுபட்ட தொடர்களில் ஹாட்ரிக் கோல் அடித்து கிறிஸ்டியானோ சாதனை

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2020      விளையாட்டு
Image Unavailable

இத்தாலி : யுவென்டஸ் அணிக்காக விளையாடி வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோலில் புதிய சாதனைப் படைத்துள்ளார்.

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக கருதப்படும் இவர், இத்தாலியில் உள்ள யுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று முன்தினம் செர்ரி ஏ-யில் நடைபெற்ற போட்டியில் யுவென்டஸ் - காக்லியாரி அணிகள் மோதின. இதில் யுவென்டஸ் 4-0 என வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 49, 67 (பெனால்டி), 82-வது நிமிடங்களில் கோல் அடித்து ஹாட்ரிக் கோலை பதிவு செய்தார். இந்த ஹாட்ரிக் கோல் மூலம் கால்பந்தில் 10 வெவ்வேறான தொடர்களில் ஹாட்ரிக் கோல் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவர் யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக், யூரோப்பியன் நேஷன்ஸ் லீக், உலக கோப்பை, கிளப் உலக கோப்பை, கோபா டெல் ரே, யூரோ தகுதிச் சுற்று, உலக கோப்பை தகுதி சுற்று, லா லிகா, பிரிமீயர் லீக்,  செர்ரி ஏ தொடர்களில் ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து